மேற்கு காரோ மலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு காரோ மலை மாவட்டம்
மேற்கு காரோ
MeghalayaWestGaroHills.png
மேற்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்துரா, இந்தியா
பரப்பு3,714 km2 (1,434 sq mi)
மக்கட்தொகை515,813 (2001)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேற்கு காரோ மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் துரா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3714 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 515,813 மக்கள் வசிக்கின்றனர். [1] இந்த மாவட்டம், மேகாலயாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம், காரோ மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களுடன் அவற்றின் தலைமையகமும் தரப்பட்டுள்ளன.

  • ததேங்கிரி - ததேங்கிரி
  • தாலு - தாலு
  • கம்பேகிரே - கம்பேகிரே
  • ரோங்கிராம் - அசாங்கிரி
  • செல்சேலா - செல்சேலா
  • திக்ரிகில்லா - திக்ரிகில்லா

சான்றுகள்[தொகு]

  1. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°31′00″N 90°13′00″E / 25.5167°N 90.2167°E / 25.5167; 90.2167