கிழக்கு காசி மலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்கு காசி மலை மாவட்டம்
காசி மலை
MeghalayaEastKhasiHills.png
கிழக்கு காசி மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம் மேகாலயா, இந்தியா
தலைமையகம் சில்லாங்
பரப்பு 2,752 km2 (1,063 sq mi)
மக்கட்தொகை 824,059 (2011[1])
படிப்பறிவு 63.31%
பாலின விகிதம் 1008
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 7
முதன்மை நெடுஞ்சாலைகள் NH-44, NH-40
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சில்லாங் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2752  சதுர கிலோமீட்டர் ஆகும். இது மேகாலயாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். [2] காசி மலை மாவட்டத்தில் இருந்து பிரித்து, கிழக்கு, மேற்கு காசி மலை மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். இதில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து ரி-போய் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [3] மண்டலங்களுடன் அவற்றின் தலைமையகங்கள் அமைந்துள்ள நகரங்களும் தரப்பட்டுள்ளன.

 • காடார்சினாங் லைட்குரோ - மாவுஜ்ராங்
 • மாவுகின்றி - மாவுகின்றி
 • மாவுபிலாங் - மாவுபிலாங்
 • மாவுரிங்கினெங் - மாவுரிங்கினெங்
 • மாவுசின்ராம் - மாவுசின்ராம்
 • மில்லியெம் - மில்லியெம்
 • பினவுராலா - பினவுராலா
 • செல்லா போலாகஞ்சு - சிரபுஞ்சி

மக்கள்[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 824,059 மக்கள் வாழ்ந்தனர்.[2] மக்கள் அடர்த்தி விகிதத்தின்படி, சதுர கிலோமீட்டருக்குள் 292 மக்கள் வாழ்கின்றனர். [2] ஆயிரம் ஆண்களுக்கு 1008 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 84.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]

போக்குவரத்து[தொகு]

சில்லாங்கில் இருந்து குவகாத்தி, சில்சார் நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணில்கலாம். குவகாத்தி ரயில் நிலையத்தின் மூலமும், குவகாத்தி விமான நிலையத்தின் மூலமும் தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணிக்கலாம். நகரங்களில் சாலைப் போக்குவரத்து வசதியும் உண்டு.

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. http://www.census2011.co.in/news/536-east-khasi-hills-census-2011-highlights.html
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
 3. Meghalaya Administrative Divisions (PDF) (Map) (in English). The Registrar General & Census Commissioner, India, New Delhi, Ministry of Home Affairs, Government of India. 2011. Retrieved 2011-09-29. 

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 25°34′00″N 91°53′00″E / 25.5667°N 91.8833°E / 25.5667; 91.8833