மேற்கு காசி மலை மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°31′00″N 91°16′00″E / 25.5167°N 91.2667°E / 25.5167; 91.2667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு காசி மலை மாவட்டம்
மேற்கு காசி
மேற்கு காசி மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்நாங்ஸ்டொயின்
பரப்பு5,247 km2 (2,026 sq mi)
மக்கட்தொகை294,115 (2001)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேற்கு காசி மலை மாவட்டம், மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. காசி மலை மாவட்டத்தைப் பிரித்து, கிழக்கு காசி மலை மாவட்டம், மேற்கு காசி மலை மாவட்டம் என இரண்டாக உருவாக்கினர். இதன் தலைமையகம் நாங்ஸ்டொயின் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5247 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

மேற்கு காசி மலை மாவட்டத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அந்த மண்டலங்களும், அவற்றின் தலைமையகங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

  • மைரங் - மைரங்
  • மவுசின்றுட் - ரியங்டோ
  • மவுதடிராய்சன் - நாங்சில்லாங்
  • நாங்ஸ்டொயின் - நாங்ஸ்டொயின்

மக்கள்[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 385,601 மக்கள் வாழ்ந்தனர். சதுர கிலோமீட்டருக்குள் 73 பேர் வாழ்கின்றனர். ஆண் பெண் பால்விகிதம் ஆயிரத்திற்கு 981 என்ற அளவில் உள்ளது. இங்கு வாழ்வோரில் 79.3% பேர் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இங்கு காசி இன பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். காரோ இன மக்களும் வாழ்கின்றனர்.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

  • லங்சியாங் அருவி
  • மவுதடிரைசான் மலை
  • நாங்குனும் தீவு
  • உமியாப் வயல்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_காசி_மலை_மாவட்டம்&oldid=3890759" இலிருந்து மீள்விக்கப்பட்டது