மேரி கோம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி கோம்
இயக்கம்ஓமங் குமார்
தயாரிப்பு
  • சஞ்சய் லீலா பன்சாலி


திரைக்கதைசயின் குவாட்ராசு
இசை
பாடலகள்:
  • சாசி சுமன்
  • சிவம்
  • பின்னணி இசை:
  • ரோகித் குல்கர்னி
நடிப்பு
ஒளிப்பதிவுகெய்கோ நஹாரா
படத்தொகுப்பு
  • ராஜேஷ் ஜி. பாண்டே
  • சங்சய் லீலா பன்சாலி
கலையகம்
  • பன்சாலி தயாரிப்பு நிறுவனம்
  • வியாகாம் 18 அசைவு பட நிறுவனம்
விநியோகம்வியாகம் 18 அசைவு பட நிறுவனம்
ஓட்டம்122 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு180 மில்லியன்[2]
மொத்த வருவாய்மதிப்பீடு. 1.04 billion[3]

மேரி கோம் (Mary Kom) என்பது 2014 ஆண்டைய இந்தி திரைப்படம் ஆகும். இதனை ஓமங்குமார் என்பவர் இயக்கியுள்ளார். வியாகம் 18 மோசன நிறுவனத்துடன் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலி இதனை தயாரித்துள்ளார். பிரியங்கா சோப்ரா இதில் மேரி கோமாக நடித்துள்ளார். தர்ஷன் குமார் மற்றும் சுனில் தபா ஆகியோர் முறையே கணவர், பயிற்சியாளராக துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது மேரி கோம் எவ்வாறு குத்துச்சண்டை வீரரானார் என்பது தொடங்கி நிங்போவில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் உலகக் குத்துச் சண்டை போட்டியில் எவ்வாறு தங்கப் பதக்கம் பெற்றார் என்பது வரை இந்தத் திரைப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சோப்ரா முதன் முறையாக சாரோ என்ற பாடல் ஒன்றைப் ( தாலாட்டுப் பாடலைப் ) பாடியுள்ளார்.

சாய்ன் குவாட்ராசு எனும் எழுத்தாளர் இந்த மொழிபுவை உருவாக்கி இயக்குநர் குமாரிடம் கூறினார். இந்தக் கதையானது மேரிகோம் அதிகம் அறியப்படாத காலத்திலேயே எழுதப்பட்டது. இந்தக் கதையை படமாக எடுப்பதற்கு மேரி கோமினுடைய அனுமதியைப் பெற அவரிடம் கேட்டார். இந்தச் சந்திப்பானது 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அவர் வெண்கலம் வாங்குவதற்கு முன்பாகவே நடந்தது. சோப்ரா , கோமினுடைய உடல்வாகு போன்று அமைவதற்காக மூன்று மாதம் கடுமையான உடற் பயிற்சிகள் மேற்கொண்டார். மேலும் கோமினுடைய தனித்துவமான குத்துச்சண்டை முறைகளையும் கற்றார். 2013 ஆம் ஆண்டு பிலிம்ஸ்டன் படமனையில் படப்பிடிப்புத் துவங்கியது. அங்கே குத்துச் சண்டை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்பு கோமினுடைய சொந்த ஊரான மணிப்பூரில் படமாக்கத் திட்டமிட்டனர். ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அது கைவிடப்பட்டது. மேரி கோம் திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் தரம்சாலா மற்றும் மணிலாவில் படமாக்கப்பட்டன.

கதைச் சுருக்கம்[தொகு]

மங்தே சுங்ஜிஜாங் கோம் ( பிரியங்கா சோப்ரா) தனது கணவர் அன்லர் கோமுடன் (தர்ஷன் குமார்) மருத்துவமனைக்கு செல்வதில் இருந்து இந்தத் திரைப்படம் துவங்குகிறது. அந்தச் சமயம் அந்த ஊரில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தினால் வண்டி கிடைப்பதில் சிக்கல் இருந்தது. வண்டி தேடி அலைந்த சமயத்தில் கிளர்ச்சிக்காரர் ஒருவரால் இவர் தாக்கப்படுகிறார். பின் நினைவு மீட்பிற்குக் காட்சி செல்கிறது. கோம் 1991 இல் ஒரு விமான விபத்து நடந்த இடத்தில் ஒரு குத்துச்சண்டை கையுறையை கண்டெடுக்கிறார். அவர் குத்துச்சண்டை பயிலவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவருடைய தந்தைக்கு அதில் விருப்பமில்லை. ஒரு நாள் சிறு பிரச்சினையின் காரணமாக ஒரு பையனை விரட்டிக்கொண்டு ஓடுகிறார். இறுதியில் அவர் உடற்பயிற்சி மையத்தை அடைகிறார். அங்கு நர்ஜித் சிங் (சுனில் தபா) ஆசிய வாகையாளரான டிங்கோசிங்கிற்கு பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார்.அதைப் பார்த்த கோம் தனக்கும் குத்துச்சண்டை பயிற்றுவிக்குமாறு நர்ஜித் சிங்கிடம் கேட்கிறார். ஆனால் அவரோ முப்பது தினங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்தால், தான் கற்றுத் தருவதாகக் கூறுகிறார். பின் தனது தந்தைக்குத் தெரியாமல் முப்பது தினங்களும் அவர் செல்கிறார். இவரது மன உறுதியைப் பார்த்த நர்ஜித் சிங் குத்துச் சண்டை பயிற்றுவிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

கோம், உள்ளூர் குத்துச் சண்டை வீரரைப் பணத்திற்காகப் போட்டிக்கு அழைக்கிறார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியை கோமின் தந்தை தொலைக்காட்சியில் பார்க்கிறார். தனது மகளின் திறமையைப் பார்த்து தனது தவறை உணர்ந்து மகளிடம் மன்னிப்பு கேட்கிறார். அதே சமயத்தில் அன்லர் கோம் , மேரி கோமிடம் அவருடைய திருமண விருப்பத்தைக் கூறுகிறார். 2006 இல் உலக குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு மேரி கோம் அன்லரைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறார். இதில் அவருடைய பயிற்சியாளருக்கு விருப்பமில்லை.

கோமிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. மறுபடியும் தான் குத்துச் சண்டையில் ஈடுபட வேண்டும் என்ற தனது ஆசையை கணவரிடம் தெரிவிக்க, அவரும் சம்மதம் சொல்கிறார். மீண்டும் பயிற்சி எடுத்து தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுகிறார். ஆனால் நடுவர்களின் ஒரு சார்பு தீர்ப்பினால் தோல்வியடைகிறார். எனவே அவர்களின் மீது நாற்காலிகளை வீசுகிறார். இதனால் அவருக்கு விளையாடுவதில் இருந்து தடை கிடைக்கிறது. பின் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கிறார். பிறகு அவரை அவமானப்படுத்தி பின் விளையாட அனுமத்திக்கிறார்கள்.

பின் தனது பயிற்சியாளரை சமாதானம் செய்து பயிற்சியை மேற்கொள்கிறார். 2008 இல் ஏ ஐ பி ஏ பெண்கள் உலக குத்துச் சண்டைப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகிறார். மூத்த மகனுக்கு இருதயப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அன்லர் கோம் கூறுகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எவ்வாறு அவர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார் எனபதை இறுதிக் காட்சியில் கூறியுள்ளார்கள். பிண்ணனியில் நாட்டுப்பண் ஒலிப்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகிறது.

கதை மாந்தர்கள் தேர்வு[தொகு]

பிரியங்கா சோப்ரா மற்றும் மேரி கோம்

குமார் மற்றும் பன்சாலி ஆகிய இருவரும் பிரியங்கா சோப்ராவே மேரி கோமாக நடிக்க வேண்டும் என எண்ணினர்.[4][5] 2012 ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே ஊடகங்கள் சோப்ரா தான் இந்தப் படத்தின் நாயகி என கூறின .ஆனால் தொடக்கத்தில் இதனை சோப்ரா மறுத்து வந்தார்.[5] அதற்கு அடுத்த மாதம் சோப்ரா நடிப்பது உறுதி என அதிகாரப்பூர்வமாக தகவல் வந்தது.[6] சோப்ராவிற்கு ஆரம்பத்தில் இந்தக் கதாப்பத்திரத்தை ஏற்பதில் ஐயம் இருந்தது. ஏனெனில் அந்தக் கதாப்பாத்திரத்தின் உடலமைப்பு, அதற்கான பயிற்சி மற்றும் குத்துச்சண்டை கற்பது போன்றவைகளால் அவருக்கு ஐயம் இருந்தது. ஆனால் இயக்குனர் குமாரின் நம்பிக்கையால் இந்தத் திரைப்படத்திற்கு அவர் ஒப்புக்கொண்டார். சோப்ராவின் தேர்வு மிகச் சரியானது என மேரி கோம் நினைத்தார்.[5][7] தினச் செய்தி மற்றும் ஆய்வு (டெய்லி நியூஸ் அண்ட் அனலிசஸ்) எனும் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோப்ரா தான் இந்தத் திரைப்படத்தில் நடிக்கப் பொருத்தமானவர் என்றும் அவரது உடலமைப்பு ஒரு உண்மையான குத்துச் சண்டை வீரரைப் போலே உள்ளது எனவும் கூறியுள்ளார்.[8]

கதாப்பாத்திரத் தேர்வு இயக்குனர்களான சுருதி மகாஜன் மற்றும் பரக் மேத்தா ஆகியோர் துணை நடிகர்களை சில மாத கலைக்காணலுக்குப் பிறகே தேர்ந்தெடுத்தனர்.[9] 2013 ஆம் ஆண்டு பெரும்பாலான ஊடகங்கள் டேனி டென்சோங்பா தான் மேரி கோமின் பயிற்சியாளர் , நர்ஜித் சிங்காக நடிக்க இருக்கிறார் எனக் கூறின.[10] ஆனால் சுனில் தபா, கோமின் பயிற்சியாளர் கதாப்பாத்திரத்திற்குத் தேர்வானார்.[11]

தர்சன் குமார் கோமினுடைய கணவராக நடிக்க இறுதிசெய்யப்பட்டார். தேசிய நாடக பள்ளியின் பேராசிரியரான ராபின் தாஸ், கோமினுடைய தந்தையாக நடித்தார்.[11]

கதை மாந்தர்கள்[தொகு]

  • பிரியங்கா சோப்ரா மேரி கோமாக
  • சுனில் தபா (நர்ஜித் சிங்)
  • தர்ஷன் குமார் (அன்லர் கோம்)
  • ராபின் தாஸ்
  • பந்தாரி ராகவேந்திரா (பீட்டர் மைக்கேல்)
  • ராகவ் திவாரி (மாங்கி)
  • சிசிர் ஷர்மா (தேசிய அணியின் பயிற்சியாளர்
  • சக்தி சின்ஹா (எஸ்.ஷர்மா)
  • கென்னி பசுமதாரி (ஜிம்மி)
  • ரித்திகா மூர்த்தி (பத்திரிக்கையாளர்)

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Mary Kom

சான்றுகள்[தொகு]

  1. "Mary Kom (2014)". British Board of Film Classification. Archived from the original on 27 March 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
  2. Malvania, Urvi (26 May 2015). "A boxer, a queen and a movie studio". Business Standard. Archived from the original on 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  3. Dasgupta, Surajeet (31 October 2014). "Breaking the myths about box office hits". Business Standard. Archived from the original on 1 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
  4. Tandon, Raedita (4 September 2014). "பிரியங்கா சோப்ராதான் தன்னுடைடைய ஒரே தேர்வு". பிலிம் ஃபேர். Archived from the original on 6 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
  5. 5.0 5.1 5.2 "Any actress can play me, but Priyanka is special: Mary Kom". Wonder Woman. 6 December 2012. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
  6. "Priyanka Chopra to play Mary Kom in Sanjay Leela Bhansali's biopic". NDTV. 27 November 2012. Archived from the original on 10 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  7. "தன்னுடைய கதாப்பத்திரத்தில் சோப்ரா நடிப்பது மகிழ்ச்சி". Hindustan Times. Press Trust of India. 5 December 2012 இம் மூலத்தில் இருந்து 6 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306224807/http://www.hindustantimes.com/bollywood/happy-that-priyanka-chopra-is-playing-me-mary-kom/story-Mh32duvsnX0NWA2JdlxLHO.html. பார்த்த நாள்: 22 October 2014. 
  8. KBR, Upala (16 August 2014). "பிரியங்கா சோப்ராவின் கதை தன்னுடையது போன்றே உள்ளது : மேரி கோம்". Daily News and Analysis. Archived from the original on 6 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
  9. Tandon, Raedita (4 September 2014). "மேரி கோம் கதாப்பாத்திரத்திற்கு சோப்ரா தான் தன்னுடைய ஒரே தேர்வு". Filmfare. Archived from the original on 6 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
  10. "டேனி டென்சோங்பா தான் சோப்ராவின் பயிற்சியாளரா?". தி இந்தியன் எக்ஸ்பிரசு. 3 May 2013. Archived from the original on 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
  11. 11.0 11.1 "ஏன் சோப்ரா மேரி கோமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்". Business Standard. 23 August 2014. Archived from the original on 18 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கோம்_(திரைப்படம்)&oldid=3718197" இலிருந்து மீள்விக்கப்பட்டது