உள்ளடக்கத்துக்குச் செல்

பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிற்சி என்பது தொழில் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்க ஏற்கனவே அத்தொழிலில் திறன் பெற்றவர்களால் வழங்கப்படும் தகவல் அல்லது திறன் பரிமாற்றம் ஆகும். பயிற்சி வழங்கப்படுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும்.

பயிற்சி வகைகள்

[தொகு]
  1. பணிமுன் பயிற்சி
  2. பணியிடைப் பயிற்சி
  3. தயாரிப்புப் பயிற்சி
  4. அன்றாடப் பயிற்சி

பணிமுன் பயிற்சி

[தொகு]

பணிக்குச் செல்வதற்கு முன்பு அப்பணி தொடர்பான விதிமுறைகள், அப்பணியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள், பணியின் மூலம் தனி நபரும் சமூகமும் அடையும் பயன்கள், பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், முந்தைய ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள் ஆகியன இப்பயிற்சியில் முக்கிய கருத்தூடாட்டப் பொருள்களாக அமையும்.

பணியிடைப் பயிற்சி

[தொகு]

பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் பணிவிதிமுறையின் அடிப்படையிலோ, தன்னார்வமாகவோ பணி குறித்த தற்போதைய மாற்றங்களை அறிந்து கொண்டு தங்கள் திறமைகளைச் சமூகம் எதிர்பார்க்கும் அளவிற்கு வெளிப்படுத்த வழங்கப்படும் பயிற்சி இதுவாகும்.

தயாரிப்புப் பயிற்சி

[தொகு]

ஒரு தேர்வு அல்லது போட்டியில் வெற்றிபெறும் பொருட்டு தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட பொருள் சார்ந்து வழங்கப்படும் அல்லது எடுத்துக்கொள்ளப்படும் பயிற்சி இதுவாகும்.

அன்றாடப் பயிற்சி

[தொகு]

உடல் நலம் பேணுதல், தங்கள் திறமையைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் மேற்கொள்ளும் பயிற்சி. எ.கா. யோகா, விளையாட்டு வீரர் மேற்கொள்ளும் பயிற்சி

பயிற்சி நிறுவனங்கள்

[தொகு]

ஒவ்வொரு துறை சார்ந்தும் பயிற்சியளிப்பதற்கென அரசு மற்றும் தனியார் சார்பில் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் சில.

பயிற்சி நிறுவனம் இடம் பயிற்சி பெறுபவர்கள்
இலால் பகதூர் சாஸ்த்திரி தேசிய நிருவாகக் கல்வியகம்[1] முசோரி, உத்தர்காண்ட் இந்திய ஆட்சிப் பணியாளர்கள்
தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்[2] புதுதில்லி ஆசிரியர்கள்/கல்வியாளர்கள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்[3] சென்னை ஆசிரியர்கள்/கல்வியாளர்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LBSNNA". அரசு. 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.
  2. "NCERT". அரசு. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2017.
  3. "TNSCERT". அரசு. Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிற்சி&oldid=3577711" இலிருந்து மீள்விக்கப்பட்டது