மூளை தண்டுவட உறை புற்று நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூளையுறைப் புற்றுநோய்
ஒத்தசொற்கள்மெனிஞ்சியோமா மூளையுறை மெனிஞ்சியல் கட்டி[1]
மெனிஞ்சியோமாவின் தோற்றத்தை விளக்கும் வகையில் மாறுபாட்டை மேம்படுத்திக் காட்டப்பட்ட மூளையின் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
சிறப்புநரம்பு அறுவை மருத்துவம்
அறிகுறிகள்ஏதுமில்லை, வலிப்பு, மறதிநோய், பேசுவதில் சிக்கல், பார்வை இடர்பாடுகள், ஒரு பக்க வலுவிழப்பு[2]
வழமையான தொடக்கம்பெரியோர்கள்[1]
வகைகள்நிலை I, II, III[1]
சூழிடர் காரணிகள்அயனியாக்கும் கதிர், குடும்ப வரலாறு[3]
நோயறிதல்மருத்துவப் படிமவியல்[2]
ஒத்த நிலைமைகள்சிறுதமனிச்சூழ் மீள்திசுப்புற்று, நிணநீர்ப்புற்றுநோய், நரம்புறைக் கட்டிகள், தனித்த நார்க்கட்டிகள், மாற்றிடம் புகல்[4]
சிகிச்சைகண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை, கதிர் மருத்துவம்[2]
மருந்துவலிப்பு அடக்கிகள், புரணித்திரலனையங்கள்[2]
முன்கணிப்பு95% முழுமையான நீக்கம், பத்து ஆண்டுகால உய்வு[5]
நிகழும் வீதம்1,000 நபர்களுக்கு 1(US)[3]

மூளைத் தண்டுவட உறை புற்றுநோய் அல்லது மெனிஞ்சியோமா அல்லது மூளையுறைக் கட்டி அல்லது மெனிஞ்சியல் கட்டி என்பது மூளை தண்டுவட உறைகளில் கட்டிகள் தோன்றுவதால் ஏற்படுகிறது. இவைகள் மெதுவாக வளரும் கட்டிகளைவே உள்ளது. இந்த மூளைத் தண்டுவட உறைகள், மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய மைய நரம்பு மண்டலத்தை சுற்றி உள்ள உறைகள் ஆகும்.[1]பொதுவாக கட்டியின் இருப்பிடத்தைப் பொறுத்தும் அருகிலுள்ள திசுக்களில் அது அழுத்துவதைப் பொறுத்தும் இதன் அறிகுறிகள் தோன்றுகின்றன.[3][6] பல வேளைகளில் அறிகுறிகள் ஏதும் உருவாவதில்லை.[2] எப்போதாவது வலிப்பு, மறதிநோய், பேசுவதில் சிக்கல், பார்வை இடர்பாடுகள், ஒரு பக்க வலுவிழப்பு அல்லது சிறுநீர்ப்பைக் கட்டுப்பாடு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மெனிஞ்சியோமாக்களில் 92% தீங்கற்றவை. எட்டு விழுக்காடு மட்டுமே மாறுபாடானவை, கடுமையானவை.[7]

கதிர் மருத்துவத்தின் போது ஏற்படும் அயனியாக்கும் கதிர்வீச்சு, குடும்பத்தில் இந்நிலைமை கொண்டிருந்த வரலாறு மற்றும் நரம்பு நார்க்கட்டி வகை-2 ஆகியவை ஆபத்து காரணிகளில் அடங்கும்.[2][3] 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இவை செல்போன் பயன்பாட்டுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை.[6] மென்வலைய உயிரணுக்கள் உட்பட பல வகையான உயிரணுக்களிலிருந்து அவை உருவாக முடியும் என்று தோன்றுகிறது.[1][2] நோய் கண்டறிதல் பொதுவாக மருத்துவப் படிமவியல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.[2]

அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால், சீரான இடைவெளியில் கண்காணிப்பு தேவைப்படும். [2] அறிகுறிகளை ஏற்படுத்தும் பெரும்பாலான நிகழ்வுகளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.[1] கட்டிகளின் முழுமையான அகற்றலைத் தொடர்ந்து 20% க்கும் குறைவானவையே மீண்டும் தோன்றும். அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பில்லை அல்லது அனைத்து கட்டிகளையும் அகற்ற முடியவில்லை எனும் வேளைகளில் கதிரியக்க அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும். கீமோதெரபி பயனுள்ளதாக இல்லை. கட்டிகளில் ஒரு சிறிய விழுக்காடு மட்டுமே வேகமாக வளர்கின்றது, இவை மோசமான விளைவுகளுடன் தொடர்புடையவைு.[1]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆயிரம் பேருக்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தொடக்கம் பொதுவாக பெரியவர்களில் இருக்கும். இந்த குழுவில் அவை 30% மூளைக் கட்டிகளைக் குறிக்கின்றன.[4] ஆண்களை விடப் பெண்கள் இரு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மெனிஞ்சியோமா 1614 ஆம் ஆண்டில் பெலிக்ஸ் பிளேட்டரால் கண்டறியப்பட்டது.[7]

அறிகுறிகள்[தொகு]

சிறிய கட்டிகள் (எ.கா., <2.0 செ.மீ) பொதுவாக அறிகுறிகளை ஏற்படுத்தாமல் பிணக்கூறு ஆய்வில் கண்டுபிடிக்கப்படுகின்றன. பெரிய கட்டிகள் அவற்றின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.

 • பெருமூளைக்கு மேலான மெனிஞ்சியோமாக்களால் குவிய வலிப்பு ஏற்படலாம்.
 • கால்களில் படிப்படியான வலுவிழப்பு மற்றும் உணர்வற்ற உடல்கழிவு வெளியேற்றம் ஆகியவை நீள்வெட்டு பக்கநுதற்பகுதியிலுள்ள கட்டிகளால் ஏற்படலாம்.
 • சிறுமூளைக் கால்வாயில் கட்டிகள் இருக்குமிடத்தைப் பொறுத்து பலவகை இயக்க, உணர்ச்சிக் குறைபாடுகள், பேச்சிழப்பு மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
 • அதிகரித்த உள்மண்டை அழுத்தம் இறுதியில் ஏற்படுகிறது, ஆனால் கிளையப்புற்றுக்களை விடக் குறைவாகவே நிகழ்கிறது.
 • தொடர்புடைய அழுத்தம் மூன்றாவது அல்லது ஆறாவது நரம்பு வாதத்தை ஏற்படுத்தினால் டஇரட்டை பார்வை அல்லது சீரற்ற கண்மணிகள் அறிகுறிகளாக இருக்கலாம்.

காரணிகள்[தொகு]

மெனிஞ்சியோக்களை ஏற்படுத்தும் காரணிகள் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை.[8] பெரும்பாலான நிகழ்வுகள் பரவலாகவும் சீரற்றும் உள்ளன சில குடும்பச்சூழல். வரலாறு போன்றவை காரணமாக உள்ளன. கதிர்வீச்சுக்கு ஆளான நபர்களுக்கு, குறிப்பாக உச்சந்தலையில், மூளையில் காயம் அடைந்தவர்களைப் போலவே, மெனிஞ்சியோக்கள் உருவாகும் ஆபத்து மிகுந்துள்ளது.[9] ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பிலிருந்து தப்பியவர்களில் மெனிஞ்சியோமாக்களைக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை பொதுவாக இந்நோய் கொண்டோரின் எண்ணிக்கையைவிட மிகுதியாக இருந்தது, இந்த நிகழ்வுகள் வெடிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. பல் எக்ஸ் கதிர்கள் மெனிஞ்சியோமாவின் தாக்கத்துடன் தொடர்புடையவை, குறிப்பாக பல் எக்ஸ் கதிரின் கதிர்வீச்சளவு தற்போதையதை விட அதிகமாக இருந்த கடந்த காலங்களில் அடிக்கடி பல் எக்ஸ்-கதிர்களைச் செய்திருந்தவர்களுக்கு மெனிஞ்சியோமா ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.[10]

அதிக உடல் கொழுப்பு இருப்பது நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.[11]

செல்போன் பயன்பாடு மெனிஞ்சியோமாவுடன் தொடர்பில்லாதது என்று 2012 மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது.[12]

நரம்பு நார்க்கட்டி வகை-2 (என்.எஃப் -2) உள்ளவர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெனிஞ்சியோமாக்கள் உருவாக 50% வாய்ப்பு உள்ளது.

மரபியல்[தொகு]

மெனிஞ்சியோமாக்களில் அடிக்கடி நிகழும் மரபணு மாற்றங்கள் (~ 50%) குரோமோசோம் 22q இல் உள்ள நரம்பு நார்க்கட்டி வகை-2 மரபணு (மெர்லின்) இல் செயலிழக்கச் செய்யும் பிறழ்வுகள் ஆகும்.

TRAF7 பிறழ்வுகள் நான்கில் ஒரு பங்கு மெனிஞ்சியோமாக்களில் உள்ளன. TRAF7, KLF4, AKT1 மற்றும் SMO மரபணுக்களில் உள்ள பிறழ்வுகள் பொதுவாக தீங்கற்ற மண்டை ஓட்டு-அடிப்படை மெனிஞ்சியோமாக்களில் காணப்படுகின்றன. NF2 இல் உள்ள பிறழ்வுகள் பொதுவாக பெருமூளை மற்றும் பெருமூளை அரைக்கோளங்களில் அமைந்துள்ள மெனிஞ்சியோமாக்களில் காணப்படுகின்றன. [13]

தடுப்பு[தொகு]

இயல்பாக உடல் எடையைப் பேணுவதன் மூலமும்,[14] தேவையற்ற பல் எக்ஸ்-கதிர்களைத் தவிர்ப்பதன் மூலமும் மெனிஞ்சியோமாக்கள் உருவாகும் ஆபத்தைக் குறைக்கலாம்.[15]

சிகிச்சை[தொகு]

கவனிப்பு[தொகு]

ஒரு மெனிஞ்சியோமா சிறியதாகவும் அறிகுறியற்றதாகவும் இருந்தால், நெருக்கமான படவியலும் பின்தொடர்தலுடன் கூடிய கண்காணிப்பும் சில வேளைகளில் பயன்படுத்தப்படலாம். 43 நோயாளிகளைப் பற்றிய ஒரு பின்னோக்கிய ஆய்வில், 63% நோயாளிகளுக்கு பின்தொடர்தலில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று கண்டறியப்பட்டது, மேலும் 37% பேரின் கட்டி வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 4 மிமீ இருந்தது.[16] இந்த ஆய்வில், இளைய நோயாளிகளுக்குப் படவியல் செய்கையில் மீண்டும் கட்டிகள் வளர்வது கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வில், அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட 213 நோயாளிகளுக்கு எதிராக 351 பின்தொடர்தலுடன் கூடிய கண்காணிப்பால் பேணப்படும் நோயாளிகளின் மருத்துவ முடிவுகள் ஒப்பிடப்பட்டன. [17] பழமைவாத சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 6% பேர் மட்டுமே பின்னர் அறிகுறிகளை கொண்டிருந்தனர், அதே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளில், 5.6% பேர் தொடர்ச்சியான நோயுற்ற நிலையை கொண்டிருந்தனர், மேலும் 9.4% பேர் அறுவை சிகிச்சை தொடர்பான நோயுற்ற நிலையையும் கூடுதலாகக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே அறிகுறிகளை ஏற்படுத்தும் கட்டிகளையுடையோருக்கு கண்காணிப்பு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆயினும், கட்டி வளர்வதைத் தவிர்க்க கண்காணிப்பும் படவியலுடன் நெருக்கமாகப் பின்தொடர்வதும் தேவைப்படுகின்றது.[18]

அறுவை சிகிச்சை[தொகு]

கட்டியின் மேற்பரப்பு மேலோட்டமாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருந்தால் மெனிஞ்சியோமாக்களை வழக்கமாக அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி முற்றிலும் நலமடையச் செய்யலாம்.[19] அருகிலுள்ள எலும்பின் மீது தாக்கம் ஏற்பட்டால், முழுமையான கட்டி அகற்றல் கிட்டத்தட்ட இயலாதது. தீங்கற்ற மெனிஞ்சியோமாக்கள் வீரியம் மிக்கதாக மாறுவது அரிதான நிகழ்வாகும்.

கட்டியின் உலக சுகாதார அமைப்பு தரத்தையும், சிம்ப்சன் அளவுகோல்களால் அறுவை சிகிச்சையின் அளவையும் ஒப்பிடுவதன் மூலம் ஒரு கட்டி மீண்டும் நிகழும் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு வளரும் நிகழ்தகவு மதிப்பிடப்படலாம்.[20]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Adult Central Nervous System Tumors Treatment" (in en). 26 August 2016 இம் மூலத்தில் இருந்து 28 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170728010619/https://www.cancer.gov/types/brain/patient/adult-brain-treatment-pdq. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Ferri, Fred F. (2017) (in en). Ferri's Clinical Advisor 2018 E-Book: 5 Books in 1. Elsevier Health Sciences. பக். 809. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323529570 இம் மூலத்தில் இருந்து 2017-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170910183411/https://books.google.com/books?id=wGclDwAAQBAJ&pg=PA809. 
 3. 3.0 3.1 3.2 3.3 Wiemels, J; Wrensch, M; Claus, EB (September 2010). "Epidemiology and etiology of meningioma.". Journal of Neuro-Oncology 99 (3): 307–14. doi:10.1007/s11060-010-0386-3. பப்மெட்:20821343. 
 4. 4.0 4.1 Starr, CJ; Cha, S (26 May 2017). "Meningioma mimics: five key imaging features to differentiate them from meningiomas.". Clinical Radiology 72 (9): 722–728. doi:10.1016/j.crad.2017.05.002. பப்மெட்:28554578. 
 5. Goodman, Catherine C.; Fuller, Kenda S. (2011) (in en). Pathology for the Physical Therapist Assistant – E-Book. Elsevier Health Sciences. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1437708936 இம் மூலத்தில் இருந்து 2017-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170910183411/https://books.google.com/books?id=eJb5RHpCF6oC&pg=SL5-PA190. 
 6. 6.0 6.1 World Cancer Report 2014. World Health Organization. 2014. பக். Chapter 5.16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9283204299. https://archive.org/details/worldcancerrepor0000unse_p0u5. 
 7. 7.0 7.1 Joung H. Lee (2008-12-11). Meningiomas: Diagnosis, Treatment, and Outcome. Springer Science & Business Media. பக். 3–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84628-784-8. https://books.google.com/books?id=c_j9piinzy8C&pg=PA3. 
 8. "Meningioma". Mayo Clinic இம் மூலத்தில் இருந்து February 28, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120228223235/http://www.mayoclinic.com/health/meningioma/DS00901/DSECTION%3Dcauses. பார்த்த நாள்: February 27, 2012. 
 9. "Epidemiology of intracranial meningioma". Cancer 72 (3): 639–48. August 1993. doi:10.1002/1097-0142(19930801)72:3<639::AID-CNCR2820720304>3.0.CO;2-P. பப்மெட்:8334619. 
 10. "Dental x-rays and risk of meningioma". Cancer 118 (18): 4530–7. September 2012. doi:10.1002/cncr.26625. பப்மெட்:22492363. 
 11. Niedermaier, T; Behrens, G; Schmid, D; Schlecht, I; Fischer, B; Leitzmann, MF (16 September 2015). "Body mass index, physical activity, and risk of adult meningioma and glioma: A meta-analysis". Neurology 85 (15): 1342–50. doi:10.1212/WNL.0000000000002020. பப்மெட்:26377253. 
 12. Repacholi, MH; Lerchl, A; Röösli, M; Sienkiewicz, Z; Auvinen, A; Breckenkamp, J; d'Inzeo, G; Elliott, P et al. (April 2012). "Systematic review of wireless phone use and brain cancer and other head tumors.". Bioelectromagnetics 33 (3): 187–206. doi:10.1002/bem.20716. பப்மெட்:22021071. Bibcode: 2009BioEl..30...45D. 
 13. Victoria E Clark; E. Zyenep Erson-Omay; Akdes Serin (March 2013). "Genomic analysis of non-NF2 meningiomas reveals mutations in TRAF7, KLF4, AKT1, and SMO.". Science 339 (6123): 1077–80. doi:10.1126/science.1233009. பப்மெட்:23348505. Bibcode: 2013Sci...339.1077C. 
 14. Lauby-Secretan, B; Scoccianti, C; Loomis, D; Grosse, Y; Bianchini, F; Straif, K; International Agency for Research on Cancer Handbook Working, Group (25 August 2016). "Body Fatness and Cancer – Viewpoint of the IARC Working Group.". The New England Journal of Medicine 375 (8): 794–798. doi:10.1056/nejmsr1606602. பப்மெட்:27557308. 
 15. "Dental X-rays Linked to Brain Tumors" இம் மூலத்தில் இருந்து 2016-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160927032101/http://www.webmd.com/brain/news/20120410/dental-x-rays-linked-brain-tumors. பார்த்த நாள்: 2016-09-23. 
 16. ": Natural history of conservatively treated meningiomas". Neurology 63 (6): 1133–4. Sep 2004. doi:10.1212/01.wnl.0000138569.45818.50. பப்மெட்:15452322. 
 17. "Indications for surgery in patients with asymptomatic meningiomas based on an extensive experience". J Neurosurg 105 (4): 538–43. 2006. doi:10.3171/jns.2006.105.4.538. பப்மெட்:17044555. https://semanticscholar.org/paper/cc414323e0a94c0bd023711aeaad132220413005. 
 18. "The natural history and growth rate of asymptomatic meningiomas: a review of 60 patients". J Neurosurg 83 (2): 222–4. Aug 1995. doi:10.3171/jns.1995.83.2.0222. பப்மெட்:7616265. https://archive.org/details/sim_journal-of-neurosurgery_1995-08_83_2/page/222. 
 19. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2007-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070110093430/http://www.aans.org/education/journal/neurosurgical/july03/15-1-10.pdf. பார்த்த நாள்: 2007-01-02. 
 20. Simpson D (Feb 1957). "The recurrence of intracranial meningiomas after surgical treatment". J Neurol Neurosurg Psychiatry 20 (1): 22–39. doi:10.1136/jnnp.20.1.22. பப்மெட்:13406590. 

வெளியிணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்