உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரியல்
ஐ.சி.டி.-10N39.3-N39.4, R32.
ஐ.சி.டி.-9788.3
நோய்களின் தரவுத்தளம்6764
மெரிசின்பிளசு003142
ஈமெடிசின்med/2781
பேசியண்ட் ஐ.இகட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு
ம.பா.தD014549

கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு (Urinary incontinence, UI) என எந்தவொரு தன்னிச்சையான சிறுநீர்க் கசிவும் குறிப்பிடப்படுகிறது. வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கின்ற ஒரு மிகப் பொதுவானதும், மனத்தகைவு ஏற்படுத்துகின்றதுமான ஒரு சிக்கலாக இது அமைந்துள்ளது. இதன் பின்னணியில் குணப்படுத்தக்கூடிய மருத்துவ நிலை இருப்பினும் பெரும்பாலும் இது மருத்துவர்களிடம் வெளிப்படுத்தப்படுவதில்லை.[1]

காரணிகள்

[தொகு]

பெண்களிடம் கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கிற்குப் பொதுவான காரணங்களாகத் தகைவு சிறுநீர்ப்போக்கும் தூண்டு சிறுநீர்ப்போக்கும் உள்ளன. இரண்டு சிக்கல்களும் உள்ள பெண்களுக்குக் கலவை சிறுநீர்ப்போக்கு உள்ளது. தகைவு சிறுநீர்ப்போக்கு சிறுநீர்வழிக்கு ஆதாரம் இல்லாமையால் ஏற்படுவது; இது பிறப்பின்போதே இடுப்பறைக் கட்டமைப்பு சேதமடைவதால் இருக்கலாம். இருமல், தும்மல் மற்றும் தூக்குதல் போன்ற வயிற்று அழுத்தத்தைக் கூடுதலாக்கும் எந்த செயலின்போதும் சிறுசிறு துளிகளாக வெளியேறுவது இதன் இயல்பாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]