கதிர்அறுவை மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமா கத்தி

பொதுவாகப் பல கூறுகளாக அல்லாமல் ஒரே கூறாக, முப்பரிமாணக் கோட்பாட்டின் அடிப்படையில் புற்றுநோய்க்கு தேர்ந்து மருத்துவம் செய்யும் முறை கதிர்அறுவை மருத்துவம் (radiosurgery) ஆகும். இது பல தளங்களிலிருந்து, பலகோணங்களில், எக்சு-கதிர் கற்றையினைச் செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கதிரறுவை மருத்துவ முறையை முதன் முதலில் வரையறுத்தவர் லார்சு லெக்சல் எனும் சுவீடிய அறிவியலாளர் ஆவார்.

கதிரறுவை மருத்துவத்திற்காக காமா கத்தி (Gamma knife) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி சுவீடனின் [[கரோலின்ஸ்கா மையம்|கரோலின்ஸ்கா மையத்தைச் சேர்ந்த லார்சு லெக்சல், மற்றும் லாடிசுலாவ் ஸ்டைனர், உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கதிருயிரியலாளர் போர்ச் லார்சன் ஆகியோர் வடிவமைத்தனர். இது லெக்சல் காம்மா கத்தி எனவும் அழைக்கப்படுகிறது. பல விற்பனையாளர்களும் இன்று எக்சு கத்தி (X knife) என்னும் கருவியினைச் சந்தைப்படுத்துகிறார்கள். இதற்காக சட்டங்கள் உள்ளன. இது முப்பரிமாண முறையில் மேற்கொள்ளப்படுவதால், முப்பரிமாண கதிர் அறுவை மருத்துவம் (Steriotactic radio surgery- SRS) எனப்படுகிறது. லினாக் (Linac), கிளினாக்(Clinac) என்கிற கருவிகளுடன் முப்பரிமாண கதிர் மருத்துவமும் (steriotactic radio therapy) மேற்கொள்ளலாம். இது SRT எனப்படும். இவையாவும் கணினி துணையுடன் சாத்தியமாகிறது.