மும்மெத்தில் காலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மும்மெத்தில் காலியம்
Structural formula of trimethylgallium
Ball-and-stick model of trimethylgallium
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மும்மெத்தில்காலேன், மும்மெத்தேனிடோகாலியம்
இனங்காட்டிகள்
1445-79-0 Yes check.svgY
ChemSpider 14323 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15051
பண்புகள்
Ga(CH3)3
வாய்ப்பாட்டு எடை 114.827 கி/மோல்
தோற்றம் தெளிவான நிறமற்ற நீர்மம்
உருகுநிலை
கொதிநிலை 55.7 °C (132.3 °F; 328.8 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தானியக்கமாகத் தீப்பிடிக்கும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மும்மெத்தில் காலியம் (Trimethylgallium) Ga(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமகாலியம் சேர்மமாகும். தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரியக்கூடிய[1] இந்நீர்மம் நிறமற்றதாக காணப்படுகிறது. மும்மெத்தில் அலுமினியம் போல அல்லாமல் மும்மெத்தில் இண்டியத்தைப் போல ஒத்த பண்புகளைக் கொண்டு ஒற்றைப்படி மூலக்கூறாக இது பலபடிகளை உருவாக்குகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

மெத்தில் இலித்தியம், [1] இருமெத்தில் துத்தநாகம், மும்மெத்தில் அலுமினியம் [3] போன்ற பல்வேறு மெத்திலேற்றும் முகவர்கள் காலியம் முக்குளோரைடுடன் வினைபுரிந்து மும்மெத்தில் காலியம் உருவாகிறது. [4] ஈதரிலுள்ள மெத்தில்மக்னீசியம் அயோடைடு சேர்மத்தைப் பயன்படுத்தி குறைந்த அளவில் ஆவியாகும் ஈரெத்தில் ஈதர் கூட்டுவிளைபொருளை மும்மெத்தில் காலியத்தைக் கொண்டு தயாரிக்கலாம். ஈதர் ஈந்தணைவிகள் இவ்வினையில் நீர்ம அமோனியாவுடன் இடப்பெயர்ச்சி அடையக்கூடும். [5] .

பயன்பாடுகள்[தொகு]

GaAs, GaN, GaP, GaSb, AlGaInP, இண்டியம் காலியம் ஆர்சினைடு, இண்டியம் காலியம் நைத்திரைடு, இண்டியம் காலியம் பாசுப்பைடு போன்ற காலியத்தைக் கொண்டுள்ள சேர்மக் குறைகடத்திகளின் உலோகக்கரிம வேதியியல் ஆவிப்படிவு செயல்முறைகளில் காலியம் தனிமத்திற்கான மூலமாக மும்மெத்தில் காலியம் பயன்படுகிறது.[6] ஒளி உமிழும் டையோடு விளக்குகள் தயாரிப்பிலும் குறைகடத்திகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மங்களாகவும் இவை பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bradley, D. C.; Chudzynska, H. C.; Harding, I. S. (1997). "Trimethylindium and Trimethylgallium". Inorganic Syntheses 31: 67–74. doi:10.1002/9780470132623.ch8. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  3. Gaines, D. F.; Borlin, Jorjan; Fody, E. P. (1974). "Trimethylgallium". Inorganic Syntheses 15: 203–207. doi:10.1002/9780470132463.ch45. 
  4. Kraus, C. A.; Toonder, F. E. (1933). "Trimethyl Gallium, Trimethyl Gallium Etherate and Trimethyl Gallium Ammine". PNAS 19 (3): 292–8. doi:10.1073/pnas.19.3.292. பப்மெட்:16577510. Bibcode: 1933PNAS...19..292K. 
  5. Kraus, C. A.; Toonder, F. E. (1933). "Trimethyl Gallium, Trimethyl Gallium Etherate and Trimethyl Gallium Ammine". PNAS 19 (3): 292–8. doi:10.1073/pnas.19.3.292. பப்மெட்:16577510. Bibcode: 1933PNAS...19..292K. 
  6. Shenai-Khatkhate, D. V.; Goyette, R. J.; Dicarlo, R. L. Jr; Dripps, G. (2004). "Environment, health and safety issues for sources used in MOVPE growth of compound semiconductors". Journal of Crystal Growth 272 (1–4): 816–21. doi:10.1016/j.jcrysgro.2004.09.007. Bibcode: 2004JCrGr.272..816S.