முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி
முகம்மது நபி
முகம்மது நபி

முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்[1] அல்லது முகம்மது நபியின் பண்புகளின் பெயர்கள்[2] என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் பல்வேறு சிறப்பு பெயர்களை முசுலிம்களால் அழைக்கப்படுவதாகும். இந்த பெயர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

மரியாதைக்குரிய அடைமொழிப் பெயர்கள்[தொகு]

முகம்மது நபியின் பாராட்டுப் பெயர்கள் அல்லது அடைமொழிப் பெயர்கள் வருமாறு:

 • நபி - இறைத்தூதர்.
 • ரசூலுல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர்.
 • ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் - அல்லாஹ் முகம்மது நபி அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக.
 • ஹபீப் - அன்பானவர்.
 • முஸ்தபா - தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]
 • அமீன் - நம்பிக்கையாளர்.[4]
 • சாதிக் - நேர்மையாளர்.[5]
 • ரவூஃப் - கருணையாளர்.[6]
 • உஸ்வத்துல் ஹஸனா - நன்னடத்தையாளர்.[7]
 • அல் இன்சான் அல் காமில் - முழுமையானவர்.[8]
 • கைருல் பஷர் - மனிதர்களின் சிறந்தவர்.[9]
 • காத்தமுன் நபி - இறுதி இறைத்தூதர்.[10]
 • ரஹ்மத்துன் லில் ஆலமீன் - அகிலத்தின் அருட்கொடை.[11]
 • ஷாஹீத் - சாட்சியாளர்.[12]
 • முபஷ்ஷிர் - நன்மாராயங் கூறுபவர்.[13]
 • நாதிர் - அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்.[13]
 • முதக்கிர் - நினைவூட்டுபவர்.[14]
 • தாஇ - இறை அழைப்பாளர்.[15]
 • பஷீர் - அறிவிப்பாளர்.[16]
 • நூர் - ஒளி பொருந்தியவர்.[17]
 • சிராஜுல் முனீர் - ஒளி கொடுக்கும் விளக்கு போன்றவர்.[18]
 • கரீம் - பெருந்தன்மையள்ளவர்.[19]
 • நிஹ்மத்துல்லாஹ் - தெய்வீக அருளைப் பெற்றவர்.[20]
 • உம்மி நபி - படிக்காத இறைத்தூதர்.[21]
 • முஜம்மில் - போர்த்தியிருப்பவர்.[22]
 • முத்தசீர் - மறைவான ஞானம் கொண்டவர்.[23]
 • ஆகிப் - இறுதி நபி.[24][25]
 • முதவக்கில் - இறை நம்பிக்கையாளர்.[26]
 • மாஹி - இறை நிராகரிப்பாகளர்களை அழிப்பவர்.[27]
 • முஅஜ்ஜஜ் - வலிமை மிக்கவர்.
 • முவக்கர் - பிரமிக்க வைத்தவர்.
 • ஃபாதிஹ் - ஆரம்பிப்பவர்.
 • ஹசீர் - கியாம நாளில் முதலில் எழுப்பப்படுபவர்.[25]
 • ஷாபி - பரிந்துபேசுபவர்.[28][29]
 • முஸாபா - சிபாரிசு செய்பவர்.[30]
 • முஹ்ஜி - நலம் பேணுபவர்.

உறவுமுறை சிறப்புப் பெயர்கள்[தொகு]

 • அபுல் காசிம் - காசிமின் தந்தை.
 • தாஹிர் - பரிசுத்தமானவர்.
 • தையுப் - இனிமையானவர்.
 • அபு அப்துல்லாஹ் - அப்துல்லாவின் தந்தை.
 • அபுல் இப்ராஹிம் - இப்ராஹிமின் தந்தை.
 • 'இப்னு அப்துல் முத்தலிப் - அப்துல் முத்தலிபின் பேரர்.

மற்ற சிறப்புப் பெயர்கள்[தொகு]

 • அகமது -புகழப்பட்டவர்.[31]
 • ஹமித் - இறைவனை துதிப்பவர்.
 • மஹ்மூத் - புகழுக்குரியவர்.
 • அப்துல்லாஹ் - அல்லாஹ்வின் அடிமை.[32]
 • இறுதித் தூதர் [33][34]
 • இறுதி நபி[35][36]
 • நடமாடும் குர்ஆன்[37]

துருக்கி நாட்டில் முகம்மது நபி புனிதர் முகமது என அழைக்கப்படுகின்றார்.[38] ஈரான் நாட்டில் பயகம்பர் (தூதர்) என அழைக்கப்படுகின்றார்.

ஆங்கில மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் PBUH (peace be upon him) என எழுதப்படுகிறது.[39]

தமிழ் மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் அவர்மீது அமைதி உண்டாகட்டும் எனப் பொருள்படும் (ஸல்) (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - (அரபு மொழி: صلى الله عليه وسلم)) என்ற அரபுத்தமிழ் எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Names and Titles of Prophet Muhammad". Journey of a Seeker Of Sacred Knowledge. January 20, 2012. http://www.seekerofthesacredknowledge.wordpress.com/2012/01/20/names-of-prophet-muhammad-peace-upon-him/. பார்த்த நாள்: January 18, 2013. 
 2. Yeniterzi, Emine. "The Names and Attributes of Prophet Muhammad in Divine Literature". Last Prophet. http://www.lastprophet.info/the-names-and-attributes-of-prophet-muhammad-in-divan-literature. பார்த்த நாள்: January 18, 2013. 
 3. திருக்குர்ஆன் 22:75
 4. ஸஹீஹ் புகாரி, 4:52
 5. திருக்குர்ஆன் 33:22
 6. திருக்குர்ஆன் 9:128
 7. திருக்குர்ஆன் 68:4
 8. "Ibn al-'Arabi, Muhyi al-Din (1164-1240)". Muslim Philosophy. பார்த்த நாள் January 18, 2013. 4. The 'perfect man' and the Muhammadan reality
 9. திருக்குர்ஆன் 33:21
 10. திருக்குர்ஆன் 33:40
 11. திருக்குர்ஆன் 21:107
 12. திருக்குர்ஆன் 33:45
 13. 13.0 13.1 திருக்குர்ஆன் 11:2
 14. திருக்குர்ஆன் 88:21
 15. திருக்குர்ஆன் 12:108
 16. திருக்குர்ஆன் 2:119
 17. திருக்குர்ஆன் 5:15
 18. திருக்குர்ஆன் 33:46
 19. திருக்குர்ஆன் 69:40
 20. திருக்குர்ஆன் 16:83
 21. திருக்குர்ஆன் 7:157–158
 22. திருக்குர்ஆன் 73:01
 23. திருக்குர்ஆன் 74:01
 24. ஸஹீஹ் முஸ்லிம், 4:1859
 25. 25.0 25.1 ஸஹீஹ் புகாரி, 4:56
 26. திருக்குர்ஆன் 9:129
 27. ஸஹீஹ் புகாரி, 4:56
 28. ஸஹீஹ் புகாரி, 9:93
 29. திருக்குர்ஆன் 3:159திருக்குர்ஆன் 4:64திருக்குர்ஆன் 60:12
 30. திருக்குர்ஆன் 19:87திருக்குர்ஆன் 20:109
 31. திருக்குர்ஆன் 61:6
 32. திருக்குர்ஆன் 25:1
 33. Muhammad and Christ, Maulana Muhammad Ali - 2011
 34. Muhammad The Messenger of God: M. Fethullah Gülen - 2014
 35. Amīn Aḥsan Iṣlāḥī, Mohammad Saleem Kayani - 2007, Tafsir of Surah al-Fātihan and Surah al-Baqarah - Page 244
 36. Islam for Beginners: What You Wanted to Ask But Didn't, p 13, Mirza Yawar Baig - 2011
 37. Rahid, Qasim (1 March 2015). "9 Questions You Should Ask Yourself Before Converting to Islam". londondance.com. http://www.huffingtonpost.com/qasim-rashid/9-questions-you-should-as_b_6413228.html. பார்த்த நாள்: 8 January 2015. 
 38. Schimmel, Annemarie (1990). Islamic Names: An Introduction (Islamic Surveys). Edinburgh University Press. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85224-563-7. 
 39. "Islam / Muslim". Woodlands Junior. மூல முகவரியிலிருந்து ஜூன் 14, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 18, 2013.

புத்தக ஆதாரங்கள்[தொகு]

 • Chiabotti, Francesco, Names, in Muhammad in History, Thought, and Culture: An Encyclopedia of the Prophet of God (2 vols.), Edited by C. Fitzpatrick and A. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014. ISBN 1610691776