முகம்மது நபியின் முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது நபியின் முத்திரை ("Seal of Muhammad", அரபு மொழி:ختم الرسول)[1]) என்பது முகம்மது நபி வெளி நாட்டு அரசர்களுக்குக் கடிதம் அனுப்பும் போது கடிதத்தின் அடிப்பகுதியில் இட்ட முத்திரையாகும். அந்த முத்திரையில் محمد رسول الله (முஹம்மது ரசூலுல்லாஹ்) என்று முகம்மது நபியின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.[2] [3][4]

மோதிரம்[தொகு]

முகம்மது நபி எகிப்து அரசர் முகவகீஸ்க்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்பகுதியில் உள்ள முத்திரை.[5]

முகம்மது நபி அரபியரல்லாதவர்களான ரோம் நாட்டைச் சேர்ந்த குழுவினருக்கு கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது முகம்மது நபி அவர்களின் தோழர்கள், 'ரோமர்கள் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக் கொள்வார்கள்' என்று கூறினார்கள். அப்போது முகம்மது நபி அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். அன்றிலிருந்து அனைத்து கடிதங்களிலும் அந்த முத்திரை இடப்பட்டு அனுப்பப்பட்டது.[2][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. to be distinguished:
    • ختم الرسول or خاتم الرسول: "seal of the messenger", the term for Muhammad's signet ring (also خاتم محمد "seal of Muhammad");
    • خاتم النبيين : "seal of the prophets", the title given to Muhammad;
    • خاتم النبوة : "seal of prophethood", the name of the egg-shaped protrusion on Muhammad's shoulder-blade;
    • also, محمد خاتمی by coincidential near-homography, the name of Mohammad Amir Khatam.
  2. 2.0 2.1 ஸஹீஹ் புகாரி, 4:77
  3. முகம்மது நபியின் மோதிரத்தில் இலச்சினை (சின்னம்)[தொடர்பிழந்த இணைப்பு] ஸஹீஹ் புகாரி எண்:5872.
  4. Seal of the Prophets: Sir Muhammad Zafarullah Khan, Interlink Pub Group Inc, 1997. ISBN 9781566562553
  5. "the original of the letter was discovered in 1858 by Monsieur Etienne Barthelemy, member of a French expedition, in a monastery in Egypt and is now carefully preserved in Constantinople. Several photographs of the letter have since been published. The first one was published in the well-known Egyptian newspaper Al-Hilal in November 1904" Muhammad Zafrulla Khan, Muhammad: Seal of the Prophets, Routledge & Kegan Paul, London, 1980 (chapter 12). The drawing of the document published in Al-Hilal was reproduced in David Samuel Margoliouth, Mohammed and the Rise of Islam, London (1905), p. 365, which is the source of this image.
  6. Holy Prophet Muhammad’s Letters to various Kings Themuslimtimes.