முகம்மது நபி அருங்காட்சியகம், ஜோர்தான்
Appearance
நிறுவப்பட்டது | 2012 |
---|---|
அமைவிடம் | ஹுசைன் பொது பூங்கா அம்மான் ஜோர்தான். |
வகை | சமய அருங்காட்சியகம் |
முகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி |
முகம்மது நபி |
---|
முகம்மது நபி அருங்காட்சியகம் ஜோர்தான் நாட்டின் தலைநகரான அம்மான் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.[1]
திறப்பு
[தொகு]இந்த அருங்காட்சியகம் 2012 மே 15 ஆம் தேதி அம்மான் நகரிலுள்ள ஹுசைன் பொது பூங்கா பகுதியில் உள்ள மன்னர் ஹுசைன் பள்ளிவாசல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதை திறந்து வைத்தவர் ஜோர்தான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா.[2]
அருங்காட்சியகம்
[தொகு]இந்த அருங்காட்சியகத்தில் முகம்மது நபியின் உடைமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அவரது தாடியில் இருந்து ஒரு முடி உட்பட உடைமைகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முகம்மது நபி பைசாண்டியப் பேரரசுக்கு அனுப்பிய கடிதமும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. முகம்மது நபி அவர்கள் இறைத்தூதுக்கு முன் வணிகம் செய்து காலத்தில் நிழலுக்காக இளைப்பாறிய மரத்தின் மரக்கன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ King opens Prophet Museum in Amman பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், ஜோர்தான் அரசு இணையதளம்.
- ↑ King opens Prophet Museum in Amman Amman news, Date:5/15/2012.