உள்ளடக்கத்துக்குச் செல்

புகாரி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் நூல்


புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari, ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري‎) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் ஸஹீஹ் புகாரி என்று அழைக்கப் படுகிறது.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [1]இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.

நூலின் உண்மையான தலைப்பு[தொகு]

இந்நூல் பொதுவாக ஸஹீஹ் அல் புகாரி என குறிப்பிடப்படுகிறது. ஆனால் நூலின் உண்மையான தலைப்பு இப்னு அல்- சலா கருத்துப்படி, "அல்- ஜாமி அல்- சஹீஹ் அல்- முஸ்னத் அல்- முக்தசர் மின் உம்ரி ரசூல் அல்லாஹி வ சுனைனிஹி வ அய்யாமிஹி" என்பதாகும்.அதாவது "முகமது நபி , அவரது நடைமுறைகள் மற்றும் அவரது காலம் தொடர்புடைய செயல்கள் தொடர்பாக இணைக்கப்பட்ட தொடர்புகள் கொண்டு உண்மையான ஹதீஸ் சேகரிப்பு" எனப் பொருள்படும்.[2]

தொகுக்கப்பட்ட வரலாறு[தொகு]

இமாம் புகாரி அவர்கள் பரவலாக அப்பாசித் கலிபா காலத்தில் தனது 16 வயதில் இருந்து பயணம் செய்து மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்து ஸஹீஹ் ஹதீஸ்கள் உட்பட கிட்டத்தட்ட 600,000 ஹதீஸ்களை தொகுத்தார்.[3].

அவருக்கு கிடைத்த ஹதீஸ்களில் மிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்த்தார்.நிபுணர்கள் கணக்கு படி ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் பொதுவாக, 7,397 ஹதீஸ்கள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு[தொகு]

மிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்க்கப் பட்டதால் இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது. முகமது நபியின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

புகாரி ஹதீஸ் இணையத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hadith of Bukhari: Volumes I, II, III & IV. Forgotten Books. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1605066776.
  2. Hadyi al-Sari, pg. 10.
  3. A.C. Brown, Jonathan (2009). Hadith: Muhammad's Legacy in the Medieval and Modern World (Foundations of Islam series). Oneworld Publications. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1851686636.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகாரி_(நூல்)&oldid=3937358" இலிருந்து மீள்விக்கப்பட்டது