உள்ளடக்கத்துக்குச் செல்

ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸஹீஹ் முஸ்லிம்(Sahih Muslim,அரபு மொழி: صحيح مسلم‎) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும். [1]. இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் ஆவார். அவரது பெயராலேயே இந்நூல் ஸஹீஹ் முஸ்லிம் என்று அழைக்கப் படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [2]. இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் ஸஹீஹ் புகாரி நூலுக்கு அடுத்து இரண்டாவது மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.

தொகுக்கப்பட்ட வரலாறு[தொகு]

ஸஹீஹ் முஸ்லீம் தொகுப்பாளர் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இ.நா 204 ( கி.பி. 817)ல் பாரசீக குடும்பத்தில் (இன்றைய இரான் ல்) நிசாப்பூரில் பிறந்தார்.தன்னுடைய பிறந்த நகரான நிசாப்பூரிலேயே இ.நா 261 ( கி.பி. 874 )ல் இறந்தார்.அவர் ஹதீஸ்கள் சேகரிக்க தற்போதைய ஈராக் , சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார்.அவர் தனது சேகரிப்பில் மொத்தமுள்ள 300,000 ஹதீஸ்களில் ஸஹீஹ் முஸ்லீம் நூலில் சேர்ப்பதற்காக கடுமையான ஏற்று அளவுகோல் அறிக்கை சோதித்தல் அடிப்படையில் தனது சேகரிப்பில் சுமார் 4,000 ஹதீஸ்களை மட்டும் சேர்த்தார்.எனவேதான் இது மிகவும் நம்ப தகுந்த ஹதீஸ் நூலாக உள்ளது.[3]

இசுலாமிய அறிஞர்களின் பார்வை[தொகு]

பல முஸ்லிம்கள் , ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் ஸஹீஹ் முஸ்லீமை இரண்டாவது மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதுகின்றனர்[4].

வெளி இணைப்புகள்[தொகு]

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தமிழ் இணையத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sahih Muslim (7 Vol. Set)". 05 September 2015. Archived from the original on 1 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. islamic-dictionary retrieved 10:06, 26 April 2010
  3. Sahih Muslim 1/4 English Arabic (Hadith Collections) " Imam Muslim Bin Hajaj Bin Naysaburi". Dar Al kotob & Jarir Bookstore. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782745144249.
  4. Various Issues About Hadiths
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸஹீஹ்_முஸ்லிம்_(நூல்)&oldid=3592124" இலிருந்து மீள்விக்கப்பட்டது