உள்ளடக்கத்துக்குச் செல்

இப்னு மாஜா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்னு மாஜா(Sunan ibn Majah, அரபு மொழி: سُنن ابن ماجه‎) என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாகும். நபிகளாரின் முக்கியமான ஆறு ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் தொகுப்பு நூல்களில் இப்னு மாஜா ஹதீஸ் தொகுப்பும் ஒன்றாகும். இதனைத் தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் இமாம் இப்னு மாஜா ஆவார். அவரது பெயராலேயே இந்நூல் இப்னு மாஜா என்று அழைக்கப்படுகிறது. இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. [1]

தொகுக்கப்பட்ட வரலாறு[தொகு]

இப்னு மாஜா தொகுப்பின் தொகுப்பாளர் இமாம் இப்னு மாஜா இசுலாமிய நாட்காட்டி (ஹிஜ்ரி) 209இல் (கி.பி. 824இல்) ஒரு பாரசீகக் குடும்பத்தில் கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார். இசுலாமிய நாட்காட்டி 273இல் (கி.பி.887இல்) இறந்தார். ஹதீஸ்களைச் சேகரிக்க அவர் குராசான், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம், தற்போதைய ஈராக் , சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பல பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார். இப்னு மாஜா தொகுத்த நூலில் 4,000 ஹதீஸ்கள் உள்ளன. இவை 1,500 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[2][3]. இப்னு மாஜா தொகுப்பு 32 புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

இசுலாமிய அறிஞர்களின் பார்வை[தொகு]

ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இப்னு மாஜா ஹதீஸ் நூலை மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக பல முஸ்லிம்கள் கருதுகின்றனர்[4]. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளில் இது ஆறாவது தரத்தில் உள்ளது.[5]

இந்தத் தரம் 14ஆம் நூற்றாண்டு வரை தீர்மாணிக்கப்படவில்லை. அல் நவவி (கி.பி. 1277 ) மற்றும் இப்னு கால்துண் (கி.பி. 1405 ) போன்ற அறிஞர்கள் "பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்களில் இருந்து சுனன் வகை விலக்கப்பட்டதாகக்" கருதினர்.மற்ற அறிஞர்கள் முஅத்தா அல்லது சுனன் அல் தாரமீ ஆகியவற்றில் ஒன்றை ஆறாவதாகச் சேர்த்தார்கள். இப்னு மாஜா தொகுப்பு மற்ற ஐந்து நூல்களுக்கு வழங்கப்பட்ட தரத்துடன் அல் கைசுரானி அவர்களால் தரப்படுத்தப்பட்டது.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. islamic-dictionary retrieved 10:06, 26 April 2010
  2. al-Dhahabi, Muhammad ibn Ahmad (1957). al-Mu`allimi (ed.). Tadhkirat al-Huffaz (in Arabic). Vol. 2. Hyderabad: Da`irat al-Ma`arif al-`Uthmaniyyah. p. 636.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Ludwig W. Adamec (2009), Historical Dictionary of Islam, p.139. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810861615.
  4. Various Issues About Hadiths
  5. Gibril, Haddad (4 April 2003). "Various Issues About Hadiths". living ISLAM – Islamic Tradition.
  6. Ignác Goldziher, Muslim Studies, vol. 2, pg. 240. Halle (Saale), 1889-1890. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-202-30778-6
  7. Scott C. Lucas, Constructive Critics, Ḥadīth Literature, and the Articulation of Sunnī Islam, pg. 106. Leidenp: Brill Publishers, 2004.
  8. Ibn Khallikan's Biographical Dictionary, translated by William McGuckin de Slane. Paris: Oriental Translation Fund of Great Britain and Ireland. Sold by Institut de France and Royal Library of Belgium. Vol. 3, pg. 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_மாஜா_(நூல்)&oldid=3275669" இலிருந்து மீள்விக்கப்பட்டது