இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் (Isra and Mi'raj, அரபு மொழி: الإسراء والمعراج‎) என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும். இது இசுலாமிய நம்பிக்கையின் படி கி.பி. 621 இல் ஒரே இரவில் நிகழ்த்திய இரவுப் பயணம் ஆகும். இது உடல் மற்றும் ஆன்மீக பயணம் என இரு வழிகளில் விளக்கப்படுகிறது.[1]

குர்ஆன் மற்றும் ஹதீஸ்[தொகு]

இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் தொடர்பான செய்திகள் குர்ஆனில் அல்-இஸ்ரா அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. [2] மற்ற அதிக கருத்துக்கள் ஹதீஸ் நூல்கள் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன.[3]

பயணம்[தொகு]

முகம்மது நபி அரேபிய பாலைவனத்தின் மக்கா நகரிலிருந்து ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலுக்கு இரவோடு இரவாக வானவர் ஜிப்ரயீல் மூலம் புராக் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி இஸ்ரா (இரவில் கூட்டிச் செல்லுதல் ) என்று சொல்லப்படும். பின்னர் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்கப்படும் அல் அக்சா பள்ளிவாசலில் இருந்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது. விண்ணுலகம் சென்ற முகம்மது நபி இறைவனைச் சந்தித்துப் பேசினார் என்பது இசுலாமிய நம்பிக்கை ஆகும்.[3][4][5]

குர்ஆன் வசனங்கள்[தொகு]

முகம்மது நபியின் மிஃராஜ் பயண நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் 17:1 வருமாறு:

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் (இறைவன்) தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.[2]

ஹதீஸ்[தொகு]

முகம்மது நபியின் மிஃராஜ் பயண நிகழ்வை நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:

பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளிவாசலில் நுழைந்தேன். என்று முகம்மது நபி கூறியதாக அனஸ் எனும் நபித்தோழர் கூறினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Martin, Richard C.; Saïd Amir Arjomand; Hermansen, Marcia ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (December 2, 2003). Encyclopedia of Islam and the Muslim World. Macmillan Reference USA. பக். 482. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-02-865603-8. 
  2. 2.0 2.1 திருக்குர்ஆன் 17:1
  3. 3.0 3.1 Bradlow, Khadija (August 18, 2007). "A night journey through Jerusalem". Times Online. http://www.timesonline.co.uk/tol/comment/faith/article2279985.ece. பார்த்த நாள்: March 27, 2011. 
  4. Momina. "isra wal miraj". chourangi. 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Meraj Article". duas.org.
  6. ஸஹீஹ் முஸ்லிம், 39:234