மாதவரம் நெடுஞ்சாலை

ஆள்கூறுகள்: 13°07′07″N 80°14′33″E / 13.118675°N 80.242565°E / 13.118675; 80.242565
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவரம் நெடுஞ்சாலை
பராமரிப்பு :பெருநகர சென்னை மாநகராட்சி
நீளம்:1.5 mi (2.4 km)
ஆள்கூறுகள்:13°07′07″N 80°14′33″E / 13.118675°N 80.242565°E / 13.118675; 80.242565
தெற்கு முனை:பெரம்பூர் தொடருந்து நிலையம்
முதன்மை
சந்திப்புகள்:
பெரம்பூர் மேம்பாலம்,
பெரம்பூர் மார்க்கெட்,
இரமணா நகர்,
மேல்பட்டி பொன்னப்பன் சாலை,
பல்லவன் சாலை
வடக்கு முனை:மூலக்கடை சந்திப்பு

மாதவரம் நெடுஞ்சாலை[1] என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில் எப்போதும் கூட்டமாகக் காணப்படும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். சென்னை மாநகரின் முக்கியமான வியாபார மையங்களில் இச்சாலைப் பகுதியும் ஒன்றாகும். இச்சாலையில், முக்கியமான தொழிற்சாலைகள் நிறைந்த 'அமால்கமேசன் குழும' தொழிற்தோட்டம் (உதாரணமாக, சார்ட்லோ இந்தியா லிமிடெட்),[1] ஜவுளி வியாபார நிறுவனங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள், மின்னணு உபகரண கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், திரையரங்க வளாகம், 'இண்டேன்' வாயு முகமை, செல்பேசி சேவை மையங்கள், தங்க நகைக் கடைகள், பூ வியாபாரிகள், பழ விற்பனையாளர்கள், தேநீர் விடுதிகள், வங்கிகள், இருசக்கர வாகன விற்பனையகம் ஆகிய தொழில் சார்ந்தோர் உண்டு.

பெரம்பூர், வியாசர்பாடி, திரு. வி. க. நகர், செம்பியம், அகரம், ஜவஹர் நகர், பெரவள்ளூர், பெரியார் நகர், கொளத்தூர், மூலக்கடை, மாதவரம், மாத்தூர், மணலி, எர்ணாவூர், எண்ணூர், மீஞ்சூர், பாரிமுனை போன்ற முக்கியமான புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் தனிநபர் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இச்சாலை வழியாக அதிகளவில் பயணிக்கின்றன.

மெட்ரோ இரயில் திட்டம்[தொகு]

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட மூன்றாவது வழித்தடத்தில் மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ இரயில் நிறுத்தமும் ஒன்று.[2] இதற்கான சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக, எந்திரங்கள் மாதவரம் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளன.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vē El̲ilaracu (2001). Valatu kai min̲n̲al: kaṭṭuraikaḷ. El̲il.
  2. DTNEXT Bureau (2023-07-19). "CMRL signs contract with TATA for underground station construction in corridor 3". www.dtnext.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  3. The Hindu Bureau (2023-08-07). "Chennai Metro Rail's 'Nilgiris' reaches Madhavaram High Road after tunnelling for 1.4 km". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.
  4. "2-ம் கட்ட சென்னை மெட்ரோ". Hindu Tamil Thisai. 2023-08-07. பார்க்கப்பட்ட நாள் 2023-09-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவரம்_நெடுஞ்சாலை&oldid=3787476" இலிருந்து மீள்விக்கப்பட்டது