மல்லி மஸ்தான் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லி மஸ்தான் பாபு
மஸ்தான் பாபு மல்லி
பிறப்பு3 செப்டம்பர் 1974
நெல்லூர், ஆந்திர பிரதேசம்
இறப்பு24 மார்ச்சு 2015(2015-03-24) (அகவை 40)
நெவடா டெரஸ் குருசிஸ், ஆண்டிஸ்
தேசியம்இந்தியர்
கல்விபி. டெக்., எம். டெக்., எம். பி. ஏ.,
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய தொழில்நுட்ப கழகம், ஜாம்செட்பூர், ஐஐடி, கரக்பூர் மற்றும் ஐஐஎம், கொல்கத்தா
பணிமலை ஏற்ற வீரர் & தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர்
வலைத்தளம்
1stindian7summits.com
இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள்

மஸ்தான் பாபு மல்லி (Malli mastan babu, 1974 - 2015), ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உலகின் முன்னணி மலையேறும் வீரரான இவர், கரக்பூர் ஐஐடி மற்றும் கொல்கத்தா ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.

2006ஆம் ஆண்டில், 19 சனவரி முதல் 10 சூலை முடிய, 172 நாட்களில் எவரெஸ்ட் சிகரம் உட்பட உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான 7 சிகரங்களின் மீது வேகமாக மலை ஏறியவர் என்ற சாதனையை நிகழ்த்தியவர்[1][2][3] அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.

ஏழு சிகரங்கள்[தொகு]

2006ஆம் ஆண்டில், 172 நாட்களில் உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு கொடுமுடிகளைத் தொட்டவர் என்ற உலக சாதனை படைத்தவர் மல்லி மஸ்தான் பாபு.

கண்டம் மலை உயரம் (மீட்டர்கள்) சிகரத்தை தொட்ட நாள் கிழமை
அண்டார்டிகா வின்சன் மாசிப் 4897 19 சனவரி 19 வியாழன்
தென் அமெரிக்கா அக்கோன்காகுவா 6962 17 பெப்ரவரி வெள்ளி
ஆப்பிரிக்கா கிளிமஞ்சாரோ 5895 15 மார்ச் புதன்
ஆஸ்திரேலியா கொஸ்கியஸ்கோ 2228 1 ஏப்ரல் சனி
ஆசியா எவரஸ்ட் 8848 21 மே ஞாயிறு
ஐரோப்பா எல்ப்ரஸ் 5642 13 சூன் செவ்வாய்
வட அமெரிக்கா மெக்கின்லி 6194 10 சூலை திங்கள்

இறுதி மலை ஏற்றம்[தொகு]

இறுதியாக மல்லி மஸ்தான் பாபு, தென் அமெரிக்காவின், ஆண்டிஸ் மலை ஏற்றத்தின் போது, மார்ச் 24, 2015 அன்று மலையேற்றக் குழுவிலிருந்து காணாமல் போனார்[4][5]. அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் மேற்கொண்ட முயற்சியால், 11 நாட்களுக்குப்பின் ஏப்ரல் 4, 2015 அன்று அவர் இறந்து போனது கண்டுபிடிக்கப்பட்டு அச்செய்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினாலும் உறுதி செய்யப்பட்டது.[6][7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. `Mountain man' creates new climbing record
  2. Savour the splendor
  3. "Top of the WORLD". Archived from the original on 2014-09-29. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  4. Ace Indian mountaineer Malli Mastan Babu found dead[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Malli Mastan Babu Death - Indian mountaineer - Exclusive – 2015
  6. Malli Mastan Babu, Mountaineer, Found Dead in Argentina After 11 Days, என்டிடிவி, நாள்: ஏப்ரல் 4, 2015
  7. காணாமல்போன இந்திய மலையேற்ற வீரர் சடலமாக மீட்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லி_மஸ்தான்_பாபு&oldid=3759942" இலிருந்து மீள்விக்கப்பட்டது