மாலவத் பூர்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலவத் பூர்ணா
பிறப்பு10 சூன் 2000
நிசாமாபாத் மாவட்டம், தெலங்காணா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமினசோட்டா மாநில பல்கலைக்கழகம், மங்காடோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணிமலை ஏற்ற வீரங்கனை

மாலவத் பூர்ணா (Malavath Purna) (பிறப்பு: 10 சூன் 2000) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மலையேற்ற வீரங்கனை ஆவார். இவர் 14-வது வயது முடியும் தருவாயில் உலகின் உயரமான எவரஸ்டை ஏறி சாதனை படைத்தார்.[1]27 சூலை 2017 அன்று எல்பிரஸ் மலையை ஏறிக்கடந்தவர்.[2]இவர் இறுதியாக 5 சூன் 2002 அன்று, 7-வது கொடிமுடியான வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள 6,190 மீட்டர் உயரமுள்ள டெனாலி மலையில் ஏறி சாதனை படைத்தார்.[3]


இவர் இளம் வயதில் உலகின் ஏழு கொடுமுடிகளை ஏறியமைக்காக புகழ் பெற்றவர். இவர் பள்ளிப்படிப்பை தெலங்காணாவில் முடித்த பின் மலையேற்றப் பயிற்சியை டார்ஜீலிங் இமயமலை மலையேற்ற பயிற்சி நிறுவனத்தில் பயின்றார்.

மாலவத் பூர்ணா ஏறிய 7 மலைக் கொடுமுடிகள்[தொகு]

  1. எவரெசுட்டு சிகரம், நேபாளம், 2014
  2. கிளிமஞ்சாரோ மலை, எத்தியோப்பியா, கிழக்கு ஆப்பிரிக்கா, 2016
  3. எல்பிரஸ் மலை, தெற்கு உருசியா, 2017
  4. அக்கோன்காகுவா, தென் அமெரிக்கா, 2019
  5. புன்சாக் ஜெயா, இந்தோனேசியா, 2019
  6. வின்சன் மலைத்திரள், அண்டார்டிகா, 2019[4]
  7. டெனாலி, அலாஸ்கா, வட அமெரிக்கா

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலவத்_பூர்ணா&oldid=3591099" இருந்து மீள்விக்கப்பட்டது