மலேரியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மலேரியாவின் வரலாறானது 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆப்பிரிக்காவின் விலங்குகளின் மீது முதலில் அறியப்பட்டத்தில் இருந்து நீண்டு வந்துள்ளது. பரவலாகவுள்ள, மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோயான மலேரியா உச்சக்கட்டமாக அன்டார்க்டிக்கா தவிர்ந்த அனைத்து கண்டங்களையும் தாக்கியது. மலேரியாவினை தடுப்பதற்கும் தகுந்த சிகிச்சை முறையை அறிந்துகொள்வதற்கும் அறிவியல் உலகமும் மருத்துவ உலகமும் பலநூறு ஆண்டுகளுக்கு பாடுபட்டன. இந்நோய்க்கு மூல காரணமாக இருக்கும் ஒட்டுண்ணியை கண்டுபிடித்ததில் இருந்து ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி மும்முரம் பெற்றது.

மனிதர்களின் நடத்தையும் வாழ்க்கை முறையும் இந்நோயின் பெருக்கத்தில் சிக்கலான காரணிகளாக அமைந்தது. எந்தவகையான மருத்துவ வசதிகளும் அற்ற கிராமப்புறங்களில் நோய் பரவியதால் துல்லியமான புள்ளி விபரங்கள் எதுவும் கிட்டாமல் போயின. இதன் விளைவாக, பல நோய் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படாமல் மறைந்து போயின. இதனால் நோய் பற்றிய மந்த நிலை தொடர்ந்தது.

நோய் பற்றிய தனித்துவமான சில தகவல்கள், கி.மு 2700 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனா வில் குறிக்கப்பட்ட தரவுகளில் இருந்து கிடைக்கப்பெற்றன.

பல ஆயிரம் ஆண்டுகளாக மலேரியா நோய்க்கு மூலிகை மருத்துவம் பயன்படுத்தப்பட்டு வந்தது. மலேரியாவிற்கான சிறப்பான சிகிச்சை முறை சின்கோன (en:Cinchona) எனப்படும், குவனைன் (Quinine) எனும் காய்ச்சலடக்கி வேதிப்பொருளை கொண்டிருக்கும் ஒருவித மூலிகைச் செடியின் பட்டையின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேரியா நோய்க்கு நுளம்புடன் இருந்த தொடர்பை கண்டறிந்ததன் மூலம், நுளம்பினை கட்டுப்படுத்த பரவலாக பாவிக்கப்படும் டி.டி.டீ(DDT) மற்றும் ஆர்டிமிஸினின் (Artemisinin) போன்ற வேதிப்பொருட்கள் சதுப்பு நிலங்களிலும், நீர் தேக்கங்களிலும் பயன்படுத்தப்பட்டன.

மலேரியா பற்றி ஆராய்ச்சி நடத்திய பல ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசினை பெற்றனர். இருந்தாலும் மலேரியா நோய் ஆண்டுக்கு 200 மில்லியன் மக்களை பீடித்ததுடன், ஆண்டுக்கு 600,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இறக்கவும் காரணமாக இருந்தது.

மலேரியா நோய் இரண்டாம் உலகப் போர் காலத்தில் தென் பசிபிக் நிலப்பகுதியில் அமெரிக்க படையினரால் எதிர்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இருந்தது. சுமார் 500,000 வரையானவர்கள் நோயினால் பீடிக்கப்பட்டனர். ஜோசப் பற்றிக் பயர்ன் (Joseph Patrick Byrne) இன் கருத்துக்கு அமைய அறுபது ஆயிரம் வரையான படையினர் ஆப்ரிக்கா மற்றும் தென் பசிபிக் போரின் போது மலேரியா நோயினால் இறந்து போனார்கள்.

20 ஆம் நூற்றாண்டின் முடிவில், மத்திய மற்றும் தென் அமெரிக்க நிலப்பகுதிகள் உள்ளடங்கலாக 100 க்கும் மேற்பட்ட வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல நாடுகளில் பரவி இருந்தது.

ஆரம்பமும் முந்திய வரலாறும்[தொகு]

The mosquito and the fly in this பால்டிக் கடல் amber necklace are between 40 and 60 million years old.

மலேரியா கிருமிக்கான முதல் ஆதாரம், நுளம்பில், 30 மில்லியன் வருடங்கள் பழமையான Palaeogene எனும் காலப்பகுதியில் கண்டுபிட்டிக்கப்ப்ட்டது. மலேரியா நோய் மனிதன் மீது முதலில் ஆப்பிரிக்காவில் தோற்றம் பெற்றது, நுளம்பு, முதனி மூலமாக பரவியது. மனிதர்களுக்கு Plasmodium falciparum எனும் மலேரியா கிருமி மனிதக் குரங்குகளிடமிருந்து பரவியது. மலேரியா தொற்றை ஏற்படுத்தும் மற்றுமொரு கிருமியான P. vivax ஆபிரிக்கவில் உள்ள மனிதக்குரங்கு மற்றும் சிம்பன்சியால் உருவானது. மனிதர்களுக்குள் தொற்றிக்கொள்ள கூடிய மற்றுமொரு கிருமியான P. knowlesi ஆசியாவில் இருக்கும் Macaque குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

10 000 வருடங்களுக்கு முன்பு மலேரியா நோயானது மனிதர்களின் வாழ்க்கையில் விவசாயம் ஆரம்பமாகிய புதுக்கற்காலப் புரட்சி காலத்தில் பாரிய தாக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. இரத்த மூலக்கூறுகளில் உருவாகும் நோய்கள் மலேரியா தொற்றுக்கு பெரும் சாதகத்தன்மையாக இருந்தது.

பண்டைய எகிப்துவில் மூலக்கூறுகள் தொடர்பான அறிமுகம் P.falciparum மலேரியா கிருமியினை தடுக்க உதவின. பண்டைய வரலாற்றாசிரியர் எரோடோட்டசு (Herodotus), எகிப்து பிரமிடு (கி.மு. சுமார் 2700 – 1700 ) நீர்மாணிப்பவர்களுக்கு மலேரியா தொற்று ஏற்படாது இருக்க அதிக அளவில் வெள்ளைப்பூண்டு வழங்கப்பட்டதாக எழுதியிருக்கிறார். கி.மு. 2613 – 2589 காலப்பகுதியில் அரசாண்ட எகிப்து நான்காவது வம்ச மன்னரான Sneferu நுளம்புகளில் இருந்து தன்னை பாதுகாக்க நுளம்பு வலையை பயன்படுத்தினார். கி.மு. சுமார் 800 ம் ஆண்டளவில் எகிப்துவில் மலேரியா நோய் இருந்ததற்கான அதாரம் டி. என். ஏ.(DNA) முறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டைய காலம்[தொகு]

52 வகையான நோய்கள் பற்றி முதலில் சுட்டிக்காட்டப்பட்ட Qing-hao 青蒿, Mawangdui ஆன்(Han) கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பத்திரம்

கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மலேரியா நோய் பண்டைய கிரேக்கத்தில் பரவலாக அடையாளம் காணப்பட்டதுடன், பல நகர அரசுகளிலும் தாக்கத்தை செலுத்தியது. μίασμα என்ற சொற்பதம்(கிரேக்கம் இல் miasma): "கறை,துாய்மைக்கேடு", பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த இப்போக்கிரட்டீசு என்பவரால், கடுமையான சுகயீனத்தை ஏற்படுத்தும், தரையில் இருந்து காற்று மூலம் பரவலடையும், ஆபத்தான காரணிகளை குறிக்க பயன்படுத்தப்பட்டது. இப்போக்கிரட்டீசு(கி.மு. 460–370), "மருத்துவத்தின் தந்தை", தொடர்ச்சி அற்ற காய்ச்சலுக்கும், தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழழுக்கும் இடையே தொடர்பை உண்டாக்கியதன் மூலம் காலத்திற்கு ஏற்ப காய்ச்சலை வேறுபிரித்து அறிந்தார்.

Huangdi Neijing(கி.மு. 300 – 200) எனப்படும் பண்டைய சீனா மருத்துவ பத்திரம், மீண்டும் மீண்டும் தொடரும், மண்ணீரல் விரிவடைதலுடன் தொடர்புடைய paroxysmal காய்ச்சல், தொற்றுநோய் நிகழ்வுப் போக்கு பற்றிய தகவல்களை கொண்டிருக்கிறது. கி.மு. 168ம் ஆண்டு காலப்பகுதியில், மூலிகை மருத்துவக் குறிப்பான Qing-hao(青蒿), சீனா வில் பெண்களுக்கு ஏற்படும் hemorrhoids எனும் நோய்க்கு சிகிச்சை அளிக்க கொண்டுவரப்பட்டது("52 வகையான வியாதிகளுக்கான குறிப்புகள்" Mawangdui கல்லறைகளில் இருந்து பெறப்பட்டது). Qing-hao, மீண்டும் மீண்டும் வரும் காய்ச்சலுக்கு அவசர நேர சிறந்த சிகிச்சை முறையாக, 4ம் நூற்றண்டு காலத்தில், சீனா வில், Ge Hong என்பவரால் முதன்மையானதாக பரிந்துரைக்கப்பட்டது.

ரோமன் காய்ச்சல்(Roman fever(Italian mal'aria)) என்பது, பல சகாப்தங்களாக ரோம் நகரினை பாரதூரமாக தாக்கிய, மலேரியா என்று அறியப்படுகிறது. 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோம் நகரை தாக்கிய தொற்று நோயாகிய ரோம் காய்ச்சல், ரோம் பேரரசின் விழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இடைக்காலம்[தொகு]

இடைக்காலப் பகுதியில் மலேரியா, வாந்திபேதி போன்ற நோய்களுக்கு சிகிச்சை முறையாக, மாந்திரீகம் மற்றும் ஜோதிடத்தை நாடியதுடன், அறுவைச்சிகிச்சை வைத்தியர்களும் கிராமப்புற வைத்தியர்களும் கடுமையான முலிகைகளை(Belladonna) நிவாரணியாக பயன்படுத்தினர்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி[தொகு]

மலேரியா(malaria) எனும் சொற்பதம் mal aria('bad air' இத்தாலிய மொழியில்) என்பதில் இருந்து மருவி வந்தது. இதற்கான காரணம், பண்டைய ரோமன் மக்கள் மலேரியாவானது பயங்கரமான வெப்பக் காற்றினால் வருவதாக நம்பினார்கள்.

பதினாராம் நூற்றாண்டு காலப்பகுதியில் கடலோர சமவெளியான தென் இத்தாலி யில் மலேரியா கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், சர்வதேசமுக்கியத்துவத்தை இழந்தது. ஏறக்குறைய அதே சமயத்தில், இங்கிலாந்து கடற்கரை சதுப்பு பிராந்தியத்தில், சதுப்பு காய்ச்சல்(மலேரியா) இனால், மரண விகிதம் இன்றைய sub-Saharan ஆப்ரிக்கா வுடன் ஒப்பிடக்கூடிய வகையில் அமைந்திருந்தது. சிறு பனிக்கட்டிக் காலம் எனப்படும் குளிர் கால ஆரம்பத்தில் பிறந்த வில்லியம் சேக்சுபியர், நோயின் பயங்கரத்தை அறிந்திருந்ததுடன், அவருடைய நாடகங்களிலும் அதனை குறிப்புணர்த்தி உள்ளார்.

அமெரிக்காவில் நோயின் பரவல்[தொகு]

மாயன்(mayan) அல்லது அசெடேக்(aztec) "மருத்துவப் புத்தகம்" இல் மலேரியா பற்றிய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 16ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய குடியேறிகளும் அவர்களுடைய மேற்கு ஆப்ரிக்கா அடிமைப் பணியாளர்களும், அமெரிக்காவிற்குள் மலேரியா வர காரணமாக இருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேரியாவின்_வரலாறு&oldid=2756787" இருந்து மீள்விக்கப்பட்டது