காய்ச்சலடக்கி
Jump to navigation
Jump to search
காய்ச்சலடக்கி (Antipyretic) என்பது உடல் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம், காய்ச்சலைக் குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்குப் பயன்படும் மருந்து ஆகும். காய்ச்சல் இல்லாதபோது சாதாரண உடல் வெப்பநிலையில் எவ்வித தாக்கத்தையும் இது ஏற்படுத்துவதில்லை.
காய்ச்சலடக்கிகள், interleukin களால் தூண்டப்பட்ட வெப்பநிலை உயர்வை ஹைப்போதலமஸ் மூலம் தடுக்கின்றன. இதன்மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் காய்ச்சல் குறைவடைகின்றது. காய்ச்சலடக்கிகள் வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின், அசெட்டமினோபென் ஆகிய மருந்துகள் முக்கியமாக வலிநீக்கிகளாகவே பயன்படுகின்றன.