ஆஸ்பிரின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-acetoxybenzoic acid | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | C(AU) D(US) |
சட்டத் தகுதிநிலை | Unscheduled (AU) GSL (UK) OTC (அமெரிக்கா) |
வழிகள் | பொதுவாக வாய் வழியாக, ஆனால் குதவழியாகவும் பயன்படுத்தல் உண்டு. லைசின் அசெட்டைல்சலிசிலேட்டு நாளவழி அல்லது தசை வழி ஊசியாகக் கொடுக்கலாம். |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | விரைவாகவும் முற்றாகவும் அகத்துறிஞ்சப்படும் |
புரத இணைப்பு | 99.6% |
வளர்சிதைமாற்றம் | கல்லீரல் |
அரைவாழ்வுக்காலம் | 300–650 mg dose: 3.1–3.2 h 1 g dose: 5 h 2 g dose: 9 h |
கழிவகற்றல் | சிறுநீரகம் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 50-78-2 |
ATC குறியீடு | A01AD05 B01AC06, N02BA01 |
பப்கெம் | CID 2244 |
DrugBank | DB00945 |
ChemSpider | 2157 |
UNII | R16CO5Y76E |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D00109 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL25 |
ஒத்தசொல்s | 2-acetyloxybenzoic acid acetylsalicylate acetylsalicylic acid O-acetylsalicylic acid |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C9 |
மூலக்கூற்று நிறை | 180.157 g/mol |
SMILES | eMolecules & PubChem |
இயற்பியல் தரவு | |
அடர்த்தி | 1.40 g/cm? |
உருகு நிலை | 135 °C (275 °F) |
கொதி நிலை | 140 °C (284 °F) (decomposes) |
நீரில் கரைதிறன் | 3 mg/mL (20 °C) |
ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid) (அசட்டோசல்) என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இது பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், இது இதயவலிக்கும் (heart attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுவது உண்டு.
இதனைக் குறைவான அளவில் நீண்டகாலம் பயன்படுத்தும்போது, சிறுதட்டைகளில் (platelets) துரோம்பொக்சேன் (thromboxane) A2 உருவாவது தடுக்கப்பட்டுச் சிறுதட்டுத் திரள்வைப் பாதிக்கிறது. இந்த இரத்தம் இளக்கும் (blood-thinning) இயல்பு இதயவலிக்கான சந்தர்ப்பங்களைக் குறைப்பதில் உதவுகின்றது. இந்த நோக்கத்துக்காக உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பிரின், 75 அல்லது 81 மில்லிகிராம் (mg) கரையக் கூடிய வில்லைகளாக உள்ளன. இவை சில சமயங்களில் ஜூனியர் ஆஸ்பிரின் என்றோ பேபி ஆஸ்பிரின் என்றோ குறிப்பிடப்படுவது உண்டு.
அளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, குடற்புண் (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் காதிரைச்சல் (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். இராய் கூட்டறிகுறிக்கும், ஆஸ்பிரினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காணப்படுவதால் இன்புளுவென்சா போன்ற நோய்க் குறித் தொகுப்புகளுக்கும், சிறுவர்களில் ஏற்படக்கூடிய சின்னமுத்து நோய்க்குறித் தொகுப்புக்களுக்கும், ஆஸ்பிரின் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.[1]