காதிரைச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதிரைச்சல் (Tinnitus, கர்ணநாதம்) என்பது வெளியில் சத்தம் இல்லாதபோதும் காதின் உட்புறத்தில் கேட்கும் ஒரு சத்தம் ஆகும். இது மென்மையாகவோ அல்லது அதிக ஒலியுடனான சத்தமாகவோ இருக்கலாம். இது மணி அடிப்பதைப் போலவோ, சங்கு ஊதுவதைப் போலவோ, கடல் அலையைப் போலவோ, சைரன் ஒலி போலவோ, பறவைகளின் ஒலி போலவோ, விசில் சப்தம் போலவோ, காதுக்குள் காற்று அடைத்தது போலவோ, தண்ணீர் ஓடுவது போலவோ அல்லது வேறு ஏதோ ஒரு ஓசை போலவோ கேட்கும். இது ஒரு நோயல்ல என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். இதனால் பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். சிலருக்கு ஒரு சில நிமிடங்களே இதன் தாக்கம் இருந்து பின்னர் இல்லாமற் போவதும் உண்டு. சிலர் பல வருடங்களாக இதிலிருந்து மீள முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் அகநிலைக் காதிரைச்சல், புறநிலைக் காதிரைச்சல் என இரு வேறுபட்ட நிலைகள் உள்ளன.

காரணிகள்[தொகு]

காதிரைச்சல் வருவதற்கான காரணிகளாக முதுமை, ஒலி அதிர்வு (அதீத சத்தம், குண்டு வெடிப்பு அதிர்ச்சி), வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, நாள்பட்ட இடைச்செவியழற்சியில், இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டலத்தின் நோய்கள், தசைநார் கூட்டு செயற்பாட்டுக் கோளாறுகள், கர்ப்பப்பை, வாய், முதுகெலும்பு நோய்கள், தசைநார் காரணங்கள், வளர்சிதை மற்றும் சிறுநீரக நோய்கள், கழுத்து நரம்புகளின் இரத்த ஓட்ட மாற்றங்கள், காதில் உள்ள கட்டிகள் போன்ற இன்னும் பல கருதப்படுகின்றன

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதிரைச்சல்&oldid=3891980" இலிருந்து மீள்விக்கப்பட்டது