மதுரை - திருநெல்வேலி இருப்புப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை - திருநெல்வேலி இருப்புப்பாதை
மதுரை சந்திப்பு தொடர்வண்டி நிலையம்
பொதுத் தகவல்
நிலைஇயக்கத்தில் உள்ளது
வட்டாரம்தமிழ் நாடு
முடிவிடங்கள்திருநெல்வேலி
மதுரை
நிலையங்கள்18
இணையதளம்Southern Railway
இயக்கம்
திறக்கப்பட்டது1 ஜனவரி 1876
உரிமையாளர்தென்னக ரயில்வே
இயக்குவோர்மதுரை கோட்டம்
Rolling stockWAP1, WAP4, WAP7, WDP3, WDP4D, WDG4, WDG3
தொழில்நுட்பத் தகவல்
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)


மதுரை-திருநெல்வேலி இருப்புப்பாதை தடம் (Madurai–Tirunelveli line) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலி நகரங்களை இணைக்கும் தொடருந்து தடமாகும். 1 சனவரி 1876 அன்று இப்பாதை பொதுப் பயணத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.[1] இந்த தொடருந்து பாதை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது 157.1 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. இந்த பாதையானது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி செல்கிறது. இந்த பாதையில் இயங்கும் பெரும்பாலான தொடர் வண்டிகளின் வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆகும்.

வரலாறு[தொகு]

1 சனவரி 1876 அன்று இப்பாதை பயண்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.[2] மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக்கும் பணிகள் 4 ஆகத்து 1981 அன்று நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி சனவரி 2010-ல் தொடங்கி சனவரி 2015-ல் நிறைவடைந்தது. 3 சனவரி 2015 முதல் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. இப்பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி ச்அனவரி 2018-ல் தொடங்கி மார்ச் 2023-ல் முடிந்தது.

தொடர்வண்டி நிலையங்கள்[தொகு]

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை மதுரை சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு.[3]

வ. எண் நிலையம் நிலையக்

குறியீடு

பழைய

பிரிவு

புதிய பிரிவு
1 மதுரை சந்திப்பு MDU A1 NSG2
2 திருப்பரங்குன்றம் TDN D NSG5
3 திருமங்கலம் TMQ D NSG5
4 சிவரக்கோட்டை SVK E NSG6
5 கள்ளிக்குடி KGD E NSG6
6 விருதுநகர் சந்திப்பு VPT A NSG4
7 துலுக்கப்பட்டி TY E NSG6
8 சாத்தூர் SRT B NSG5
9 நல்லி NLL E NSG6
10 கோவில்பட்டி CVP A NSG4
11 குமாரபுரம் KPM E NSG6
12 கடம்பூர் KDU E NSG6
13 இளவேலங்கள் IVL E NSG6
14 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு MEJ D NSG5
15 நாரைக்கிணறு NRK E NSG6
16 கங்கைகொண்டான் GDN E NSG6
17 தாழையூத்து TAY E NSG6
18 திருநெல்வேலி சந்திப்பு TEN A NSG3

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "Indian Railways history". பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
  3. "Annual originating passengers & earnings for the year 2017–18" (PDF). Southern Railways. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2019.