உள்ளடக்கத்துக்குச் செல்

மகுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீதியில் மகுடி வாசிக்கும் பாம்பாட்டி ஒருவர்

மகுடி என்பது பாம்பாட்டிகள் பயன்படுத்தும் ஒரு மரபுவழி இசைக்கருவி இதுவாகும். இது துளைக்கருவிகள் அல்லது காற்று இசைக்கருவிகள் வகையைச் சேர்ந்தது.

வரலாறு

[தொகு]

மகுடி இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் கிராமிய இசையிலும் பாம்பாட்டிகளாலும் பன்னெடுங்கலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [1]

கருவி அமைப்பு

[தொகு]
சுரைக்குடுக்கையால் செய்யப்பட்ட மகுடி
மகுடி.

சுரைக்குடுக்கை என்னும் உலர்ந்த சுரைக்காய் இதற்குப் பயன்படும். சுரைகுடுக்கையின் கழுத்துப் பகுதி நீக்கப்பட்டு அதில் மூங்கில் குழல்கள் பொருத்தப்படும். இசையை ஏற்படுத்தக் கூடியவாறு ஏழு துளைகள் வரை குழலில் இடப்படும். இடைவெளிகள் தேன்மெழுகு மூலம் காற்றிறுக்கமாக மூடப்படும்.[1] இரண்டு அல்லது மூன்று குழல்களைக் கொண்ட மகுடிகளும் உள்ளன. மகுடியின் வடிவமானது நடுப்பகுதி உப்பலாகவும் வாய்ப்பகுதியும், அடிப்பகுதியும் புல்லாங்குழல் போலவும் இருக்கும். 28 சைவ ஆகமங்களில் ஒன்றான காமிகாமகம் நூலில் மகுடி இசையை புஜங்க ஸ்வரம் என்று குறிப்படபட்டுள்ளது.[2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Chhau, Mahakali pyakhan and Yakshagana. Dance and Music in South Asian Drama. Tokyo, Japan: The Japan Foundation 1983.
  2. ந. வினோத் குமார் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 96.
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடி&oldid=3455024" இலிருந்து மீள்விக்கப்பட்டது