உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுகொட்டி (இசைக்கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.[1]

பிற பெயர்கள்

[தொகு]

கிடுகிட்டி, கிடிகிட்டி,கிரிகிட்டி என வெவ்வேறுவிதமாக இந்த இசைக்கருவி அழைக்கப்பட்டுள்ளது[2].

அமைப்பு

[தொகு]

இது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.[3]

பொய்க்கால் ஆட்டம், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது.

கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள்[2]

[தொகு]

நாகப்பட்டணத்திற்கு அருகிலுள்ள கீழ்வேளுர் எனும் ஊரில் கேடிலியப்பர் எனும் கோயில் உள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளில் கிடிகிட்டி இசை முக்கிய இடம்பெற்றது. இதன்காரணமாக இவ்வூரில் கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள், தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். இவர்களுக்குப் பிறகு வந்த முத்துவீர் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை என்போருக்கு கிடிகிட்டி வாசிக்கத் தெரியும். எனினும், தவிலிசைக் கலைஞர்களாக இசைத் துறையில் இருக்கிறார்கள்.

கீவளூர் சுப்பராய பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தபிள்ளை , தில்லையாடி ஸ்ரீநிவாச பிள்ளை ஆகியோர் வல்லுனர்களாக விளங்கியுள்ளனர்.

தேவாரத்தில் கொடுகொட்டி பற்றிய குறிப்புகள்

[தொகு]
 • கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி-பக்கமேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
 • குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை, விரவினார் பண்கெழுமிய வீணையும்;[4]
 • கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக் கொண்ட தொண்டரை[5]
 • கொடுகொட்டி கொட்டாவந்து;[6]
 • கொடுகொட்டி கொண்டது ஓர் கையான் தன்னை;[7]
 • குண்டைப் பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட;[8]
 • கொடுகொட்டி கையல குகையிற்கண்டேன்[9]
 • கொடுகொட்டி கொண்டு ஒரு கை [10]
 • கொடுகொட்டி கால் ஒர் கழலரோ;[11]
 • விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம், கொட்டிப்பாடும் இத்துந்துமியொடு[12]

சான்றுகள்

[தொகு]
 1. இரட்டை நாயன முறை
 2. 2.0 2.1 சுந்தரம், பி. எம். (டிசம்பர் 2013). மங்கல இசை மன்னர்கள். சென்னை: முத்துசுந்தரி பிரசுரம். pp. 373, 377. {{cite book}}: Check date values in: |year= (help)
 3. வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.
 4. நாவுக்கரசர் தேவாரம்,காளப்பகாட்டிருக்குருந்தொகை :1
 5. நாவுக்கரசர் தேவாரம், திருப்பாலைத்துறை:7
 6. நாவுக்கரசர், திரு ஆமாத்தூர்:6
 7. நாவுக்கரசர், திருவாரூர் தாண்டகம்:(6)-3
 8. நாவுக்கரசர்,திருவெண்காடு:5
 9. நாவுக்கரசர், திருத்தாண்டகம்:8
 10. சம்பந்தர், திருவலம்புரம்:2
 11. சுந்தரர், தேவாரம்:5
 12. சுந்தரர், திருமுருகன் பூண்டி

வெளியிணைப்புகள்

[தொகு]
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுகொட்டி_(இசைக்கருவி)&oldid=3590873" இலிருந்து மீள்விக்கப்பட்டது