எக்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்காளம்

எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு காற்றிசைக் கருவி ஆகும்.

எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.

விளக்கம்[தொகு]

எக்காளமானது ஆறு அடி நீளம் கொண்டது. சுமார் நான்கு கிலோ எடை இருக்கும். இதை மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்துவைத்துக் கொள்ளலாம். இது பித்தளை அல்லது தாமிரக் குழாய்களால் செய்யப்பட்டது. இது சங்கு, நாகசுரம் ஆகியவற்றின் இசைக் கலவை ஆகும். இதில் துளைகள் ஏதும் இருக்காது. கிராமிய பஞ்ச வாத்தியம் என்று அழைக்கப்படும் ஐந்து இசைக் கருவிகளில் இதுவும் ஒன்று.[1]

தமிழகத்தில் வாழும் தொட்டிய நாயக்கர் இந்த எக்காளத்தை ஊதியபடியே ஆடும் எக்காளக் கூத்து என்றும் நாட்டுப்புறக் கலை முற்காலத்தில் இருந்தது. தற்போது இக்கலை வழக்கொழிந்துவிட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. வெற்றியின் 'எக்காளம்'! (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். பக். 169. 
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்காளம்&oldid=3277305" இலிருந்து மீள்விக்கப்பட்டது