சுரைக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரைக்காய்
Lagenaria siceraria
Green calabash on the vine
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Lagenaria
இனம்: L. siceraria
இருசொற் பெயரீடு
Lagenaria siceraria
(Molina) Standl.
வேறு பெயர்கள்
  • Cucurbita lagenaria (L.) L.
  • Lagenaria vulgaris Ser.

சுரைக்காய் (Calabash / Bottle gourd) உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இஃது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்க்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இஃது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

இஃது இரண்டு அடி நீளம் மற்றும் மூன்று அங்குலம் விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த காய்கறி ஆகும்.

சுரைக்காய்[தொகு]

மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும், இதன் பூர்விகம் தென்னாப்பிரிக்கா என்று நம்பப்படுகிறது. உடம்பில் கொழுப்பைக் கரைப்பதிலும் சிறுநீரகங்களைப் பாதுகாப்பதிலும் சுரைக்காய் பயன்படுகிறது.

சாகுபடி முறை[தொகு]

உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வாரம் காலத்தில் முழைப்பு தோன்ற தொடங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு இரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு மாதம் காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் தொடங்கும். தொடர்ச்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம்.

100 கிராம் சுரைக்காயில் உள்ள சத்துகள்[தொகு]

சக்தி 63ஜூல்கள், கார்போஹைட்ரேட் 3.69கிராம், நார்ச்சத்து 1.2 கிராம், கொழுப்பு 0.02 கிராம், ப்ரோடீன் 0.6 கிராம், வைட்டமின் பி1 0.029மில்லிகிராம், இன்னும் பல சத்துகள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரைக்காய்&oldid=3774294" இலிருந்து மீள்விக்கப்பட்டது