மகாத்மா காந்தி பன்னாட்டு இந்திப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மகாத்மா காந்தி பன்னாட்டு இந்திப் பல்கலைக்கழகம் (Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வார்தாவில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

சனவரி 8, 1997-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தி மொழி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு கற்பித்தலை ஒருங்கிணைப்பதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.[2]

பல்கலைக்கழக மையங்கள்[தொகு]

இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.

  • வார்தா
  • பிரயாக்ராஜ்
  • கொல்கத்தா
  • ரித்பூர்

புலங்களும் துறைகளும்[தொகு]

இப்பல்கலைக்கழம் ஆரம்பத்தில் 8 பள்ளிகளுடன் திட்டமிடப்பட்டன. இவை:

மொழிகள் பள்ளி[தொகு]

  • மொழியியல் மற்றும் மொழித் தொழில்நுட்பத் துறை
  • தகவல் மற்றும் மொழி பொறியியல் மையம்

வெளிநாட்டு மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வுகளுக்கான மையம்[தொகு]

இலக்கியப் பள்ளி[தொகு]

  • இந்தி மற்றும் ஒப்பீட்டு இலக்கியத் துறை
  • கலைநிகழ்ச்சி துறை
  • ஆங்கில இலக்கியத் துறை
  • உருது இலக்கியத் துறை
  • சமசுகிருத இலக்கியத் துறை
  • மராத்தி இலக்கியத் துறை

கலாச்சார பள்ளி[தொகு]

  • காந்தி மற்றும் அமைதி ஆய்வுகள் துறை   
  • மகளிர் ஆய்வுத் துறை   
  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிடோ கன்ஹு முர்மு தலித் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையம்
  • டாக்டர் பதந்த் ஆனந்தகௌசல்யாயன் புத்த ஆய்வு மையம்

மொழிபெயர்ப்பு பள்ளி[தொகு]

  • மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறை
  • இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர் ஆய்வுகள் துறை

மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி[தொகு]

  • மக்கள் தொடர்பு துறை
  • மானுடவியல் துறை
  • வர்தா சமூகப் பணி நிறுவனம்

கல்வியல் பள்ளி[தொகு]

  • கல்வித்துறை   
  • உளவியல் துறை

மேலாண்மை பள்ளி[தொகு]

  • வர்த்தகம் மற்றும் மேலாண்மைத் துறை

சட்டப் பள்ளி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahatma Gandhi Antarrashtriya Hindi University: Expulsion of six Dalit-OBC students revoked". National Herald (in ஆங்கிலம்). 14 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  2. Αναστάσης, Βιστωνίτης (2014-02-04). "Το μονοπάτι του Γκάντι". Ειδήσεις - νέα - Το Βήμα Online (in கிரேக்கம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.

வெளி இணைப்புகள்[தொகு]