உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கிம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் பல்கலைக்கழகம்
Sikkim University
குறிக்கோளுரைதேடக், அறிவு, ஞானம்
Quest Knowledge Wisdom
வகைமத்தியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2006
வேந்தர்டி. பி. செகாட்கேர்
துணை வேந்தர்அவிஞாசு கேரே[1]
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்www.cus.ac.in

சிக்கிம் பல்கலைக்கழகம் (Sikkim University) என்பது இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது கேங்டாக்கில் உள்ளது. இந்த வளாகம் தெற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்காங்கில் கேங்டாக்கிலிருந்து சுமார் 56 கிலோமீட்டர்கள் (35 mi) தொலைவில் உள்ளது.[3] இதன் முதல் வேந்தர் மா. சா. சுவாமிநாதன்; முதல் துணைவேந்தர் மகேந்திர பி லாமா.

2008ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் சமூக அமைப்பு மற்றும் மானுடவியல் ஆகிய நான்கு துறைகளுடன் தொடங்கப்பட்டது. அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் மற்றும் மேலாண்மை; சர்வதேச உறவுகள் / அரசியல்; மற்றும் நுண்ணுயிரியல் துறைகள் நிறுவப்பட்டன. இன வரலாறு, மலை ஆய்வுகள், எல்லை ஆய்வுகள் மற்றும் மலை இசை மற்றும் கலாச்சாரம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய தனித்துவமான மற்றும் மாநிலத்துடன் தொடர்புடைய பாரம்பரியமற்ற படிப்புகளுடன் மனிதநேயம், உடல் மற்றும் வாழ்க்கை அறிவியல் மற்றும் வனவியல் தொடர்பான பாரம்பரிய படிப்புகளைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.[4]

சிக்கிம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள்

[தொகு]

பல்கலைக்கழகத்தில் பின்வரும் பள்ளிகள், துறைகள் மற்றும் ஆய்வு மையங்கள் உள்ளன:[5]

 • சமூகஅறிவியல் பள்ளி
  • பொருளாதாரத் துறை
  • வரலாற்றுத் துறை
  • சட்டத் துறை
  • சர்வதேச உறவுகள் துறை
  • அரசியல் அறிவியல் துறை
  • சமூகவியல் துறை
  • அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் மற்றும் மேலாண்மைத் துறை
 • உயிரியல் பள்ளி
  • தாவரவியல் துறை
  • தோட்டக்கலைத் துறை
  • நுண்ணுயிரியல் துறை
  • விலங்கியல் துறை
 • இயற்பியல் அறிவியல் பள்ளி
  • வேதியியல் துறை
  • கணினி பயன்பாடுகள் துறை
  • புவியியல் துறை
  • கணிதத் துறை
  • இயற்பியல் துறை
 • மொழி மற்றும் இலக்கியப் பள்ளி
  • பூட்டியா துறை
  • சீனத் துறை
  • ஆங்கிலத் துறை
  • இந்தி துறை
  • லெப்சா துறை
  • லிம்பு துறை
  • நேபாளி துறை
 • மனித அறிவியல் பள்ளி
  • மானிடவியல் துறை
  • புவியியல் துறை
  • உளவியல் துறை
 • தொழில்முறை ஆய்வுகள் பள்ளி
  • வணிகத் துறை
  • கல்வித்துறை
  • மேலாண்மைத் துறை
  • இசைத் துறை
  • வெகுஜன தொடர்புத் துறை
  • சுற்றுலாத் துறை

இணைவுபெற்ற கல்லூரிகள்

[தொகு]
 • தம்பர் சிங் கல்லூரி, 6வது மைல் சம்தூர், தடோங், கிழக்கு சிக்கிம்
 • அரசுக் கல்லூரி, ரெனாக் கிழக்கு சிக்கிம்
 • அரசு தொழிற்கல்வி கல்லூரி, டென்டாம், மேற்கு சிக்கிம்
 • நம்ச்சி அரசு கல்லூரி, தெற்கு சிக்கிம்
 • நர் பகதூர் பண்டாரி அரசுக் கல்லூரி, தடோங், கிழக்கு சிக்கிம்
 • சிக்கிம் அரசுக் சட்டக் கல்லூரி புர்டுக், கிழக்கு சிக்கிம்
 • சிக்கிம் அரசுக் கல்லூரி புர்டுக், கிழக்கு சிக்கிம்
 • சிக்கிம் அரசுக் கல்லூரி, கியால்ஷிங், மேற்கு சிக்கிம்
 • சிக்கிம் அரசுக் அறிவியல் கல்லூரி, சகுங், மேற்கு சிக்கிம்
 • கர்கமயா கல்வியியல் கல்லூரி
 • இலயோலா கல்வியியல் கல்லூரி
 • சிக்கிம் அரசு கல்வியியல் கல்லூரி
 • அரசு மருந்தியல் கல்லூரி
 • இமயமலை மருந்தியல் நிறுவனம், மஜிதர், கிழக்கு சிக்கிம்
 • அரசு செவிலியர் கல்லூரி, சிக்கிம்
 • நமிகல் திபெத்திய நிறுவனம்
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

மேற்கோள்கள்

[தொகு]
 1. "From the Vice-Chancellor's Desk". www.cus.ac.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 10 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. The Sikkim University Act, 2006, No. 10 of 2007.
 3. "Sikkim VC swipe at government on land". 29 December 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
 4. "Prof Tanka Bahadur Subba, New VC of Sikkim University". Northeast Today. 26 September 2012. Archived from the original on 3 November 2012. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
 5. "Schools of study". cus.ac.in. பார்க்கப்பட்ட நாள் 12 August 2018.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_பல்கலைக்கழகம்&oldid=3929781" இலிருந்து மீள்விக்கப்பட்டது