பெரலசேரி

ஆள்கூறுகள்: 11°50′57″N 75°29′10″E / 11.849140°N 75.486010°E / 11.849140; 75.486010
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரலசேரி
நகரம்
பெரலசேரி கோயில் குளம்
பெரலசேரி கோயில் குளம்
ஆள்கூறுகள்: 11°50′57″N 75°29′10″E / 11.849140°N 75.486010°E / 11.849140; 75.486010
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,818
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL

பெரலசேரி (Peralasseri) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது கண்ணூர் - கூத்துப்பறம்பு நெடுஞ் சாலையில் கண்ணூர் நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அஞ்சாரகண்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

பெரலசேரியானது கண்ணூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவில் உள்ளது. இதன் அருகிலுள்ள நகரமும், தொடருந்து நிலையமும் தலசேரி ஆகும், இந்த ஊரானது நான்கு பஞ்சாயத்துகளால் சூழப்பட்டுள்ளது. அவை கடம்பூர், வெங்கட், அஞ்சாரகண்டி, பினராயி போன்றவை ஆகும். பெரலசேரி சுப்பிரமண்யர் கோயிலுக்கு அருகில் பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி,[1] பெரலசேரி மக்கள் தொகையானது 15,818 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 47%, பெண்கள் 53% என உள்ளனர். பெரலசேரி மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட கூடுதல் ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 85%. ஆகும். பெரலசேரி மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்கள். கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள்[தொகு]

கண்ணூர் - குத்துப்பரம்ப மாநில நெடுஞ்சாலை இந்த இடத்தை கடந்து செல்கிறது. பெரலசேரியானது   கண்ணூர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் கண்ணூர் ( மட்டனூர் ) வானூர்தி நிலையத்திலிருந்து சுமார் 14   கி.மீ. தொலைவில் உள்ளது. [சான்று தேவை] [ சான்று தேவை ]

பெரலசேரியில் தொங்கு பாலம்

பெரலசேரியில் உள்ள தொங்கு பாலம் ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சமாகும். [சான்று தேவை] அஞ்சாரகண்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சில தொங்கு பாலங்களில் ஒன்றாகும்.

ஏ.கே.ஜி உயர்நிலைப்பள்ளி, பெரலசேரி

அரசு அலுவலகங்கள்[தொகு]

 • பெரலசேரி கிராம பஞ்சாயத்து அலுவலகம்
 • முண்டலூர் அஞ்சல் அலுவலகம்
 • மக்ரேரி கிராம அலுவலகம்
 • கே.எஸ்.இ.பி. மின் பிரிவு அலுவலகம் - பெரலசேரி
 • கேரள நீர் ஆணையத்தின் உதவி பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகம்.
 • பி.எஸ்.என்.எல் தொலைபேசி பரிமாற்ற அலுவலகம் - பெரலசேரி

ஏ.கே.ஜி உயர்நிலைப்பள்ளி[தொகு]

பெரலசேரி ஏ. கே. ஜி ஸ்மாரக அரசு மேல்நிலைப்பள்ளி என்பது பெரலசேரி நகரத்தின் பழமையான பள்ளி ஆகும். இந்தக் கோயிலானது முண்டல்லூரில் கண்ணூர் சாலையில் உள்ள பெரலசேரி கோயில் அருகே அமைந்துள்ளது. இந்த பள்ளி தேர்ச்சி விகித்தத்திற்காகவும், கேரளாவில் உள்ள ஒரு நல்ல அரசுப் பள்ளியாகவும் அறியப்படுகிறது  


மருத்துவம்[தொகு]

 • ஏ.கே.ஜி ஸ்மாரகா கூட்டுறவு மருத்துவமனை
 • அரசு ஆயுர்வேத மருந்தகம்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்[தொகு]

வங்கிகள்[தொகு]

 • பெரலசேரி சேவை கூட்டுறவு வங்கி - பிரதான கிளை
 • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா - பெரலசேரி கிளை
 • மூவஞ்சேரி கூட்டுறவு கிராமப்புற வங்கி - பெரலசேரி கிளை
 • கனரா வங்கி - பெரலசேரி கிளை

பிரபலமான சமய மையங்கள்[தொகு]

போக்குவரத்து[தொகு]

இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை கண்ணூர் நகரம் வழியாக செல்கிறது. இங்கிருந்து கோவா மற்றும் மும்பையை வடக்கு நோக்கியும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை தெற்கு நோக்கியும் அணுகலாம். இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைகிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர் - பாலக்காடு பாதையில் உள்ள கண்ணூர் ஆகும். இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளுக்குமான தொடருந்துகள் இங்கு இணையத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன. மட்டனூர், மங்களூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் சர்வதேச விமான நிலையங்கள் என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமானங்கள் கிடைக்கின்றன.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

 • ஏ. கே. கோபாலன் - அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி
 • சி. எச். குஞ்சப்பா - எழுத்தாளர்
 • சுகலா சுரேஷ் - கலைஞர்

குறிப்புகள்[தொகு]

 1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரலசேரி&oldid=2983652" இலிருந்து மீள்விக்கப்பட்டது