பெரலசேரி சுப்பிரமணியர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரலசேரி சுப்பிரமணியர் கோயில் (Peralassery Sri Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தின் பெரலசேரி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் கண்ணூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இராமனும், இலட்சுமணனும் சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கியதாகவும் அவரே முருகன் சிலையை சிறுவியாகவும் தொன்மம் நிலவுகிறது. இக்கோயில் உட்புறத்தில் எங்கு பார்த்தாலும் வெண்கலம், செம்பாலான பாம்பு உருக்கள் உள்ளன.[1] இந்க் கோயிலுக்குச் சொந்தமான அழகிய குளம் உள்ளது.

இக்கோயிலில் அக்டோபர் மாதத்தில் காவிரிச் சங்கமம் விழா, திசம்பரில் கார்த்திகை உற்சவம், திசம்பர் கடைசி வாரத்தில் ஏழு நாட்கள் நடக்கும் கூடியாட்டம் போன்றவை முக்கியமான விழாக்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]