புள்ளிப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Life
புள்ளிப் புறா
Spotted Dove (Streptopelia chinensis) Photograph by Shantanu Kuveskar.jpg
S. chinensis suratensis (இந்தியா)
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: புறா
குடும்பம்: புறா
பேரினம்: Spilopelia
இனம்: S. chinensis
இருசொற் பெயரீடு
Spilopelia chinensis
(Scopoli, 1768)
Subspecies
  • chinensis Scopoli, 1768
  • ceylonensis Reichenbach, 1862
  • hainana Hartert, 1910
  • suratensis JF Gmelin, 1789
  • tigrina Temminck, 1811
வேறு பெயர்கள்
  • Streptopelia chinensis
  • Stigmatopelia chinensis

புள்ளிப் புறா என்பது ஆங்கிலத்தில் (Spotted Dove ) என்று அறியப்படுகிறது இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது, சிறிய நீண்ட வாலை கொண்ட சிற்றினம் ஆகும்.

பெயர்கள்[தொகு]

தமிழில் :புள்ளிப் புறா

ஆங்கிலப்பெயர் :Spotted Dove

அறிவியல் பெயர் :streptopelia chinensis [2]

உடலமைப்பு[தொகு]

30 செ.மீ. - கருப்பும் வௌ;ளையுமான சதுரங்கள் பலகையை ஒத்த புள்ளிகளைப் பின் கழுத்தில் கொண்ட இதன் உடலின் மேற்பகுதி இளஞ்சிவப்புக் கலந்த பழுப்பாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும். மார்பு இளஞ்சிவப்பாகவும் வயிறு, வாலடி, வால் கீழ் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்.

இறகுகளை இலகுவாக பலநிலைகளில் வைக்கும் புள்ளிப் புறா

காணப்படும் பகுதிகள்[தொகு]

நீர் வளமிக்க காடுகளையும் விளைநிலங்களையும் ஈரமிக்க இலையுதிர் காடுகளையும் சார்ந்து இணையாகவோ சிறு கூட்டமாகவோ திரியும்.

கொல்கத்தாவில் காணப்பட்ட புள்ளிப் புறா

உணவு[தொகு]

காட்டுப்பாதைகளிலும் அறுவடை முடிந்த வயல்களிலும் தானியங்களையும் புல்விதைகளையும் உணவாகப் பொறுக்கித் தின்னும். இனப்பெருக்கப் பருவம் நெருங்கும் போது உயர இருந்து இறக்கை மடக்கிக் கீழே குப்புற விழும் பழக்கம் கொண்டது. க்ரூக்ரூக் எனக் குரல் கொடுக்கும். இக்குரல் ஒலி வட்டாரத்திற்கு வட்டாரம் மக்களின் வட்டார மொழி போலச் சிறிதளவு வேறுபடுவது உண்டு.

இனப்பெருக்கம்[தொகு]

ஆண்டு முழுவதும் மரங்களில் தாழ்வான கிளைகளிடையே தட்டுப் போல கூடமைத்து 2 முட்டைகள் இடும். மக்கள் வாழும் பங்களாக்களின் மாடிச்சுவர் பிதுக்கம். இறவாரம், கோப்பு ஆகியவற்றிலும் கூடும் அமைக்கும்.

கூடும் முட்டைகளும்

[3]

வெளி இணைப்புகள்[தொகு]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Spilopelia chinensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2015). பார்த்த நாள் 3 June 2013.
  2. "Spotted Dove புள்ளிப் புறா". பார்த்த நாள் 8 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:63
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளிப்_புறா&oldid=2550097" இருந்து மீள்விக்கப்பட்டது