உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சை பூக்கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புரோக்கோலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பச்சை பூக்கோசு
Broccoli
இனம்Brassica oleracea
பயிரிடும்வகைப் பிரிவுItalica group (இத்தாலிக்கா பிரிவு)
தோற்றம்இத்தாலியில் இருந்து (2,000 ஆண்டுகளுக்கு முன்னர்)[1][2]

பச்சை பூக்கோசு (broccoli) என்பது Brassicaceae (or Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த, தலைப்பகுதி எனக் கூறப்படும் பெரிய பூவாலான உணவுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியைக் கொண்ட ஒரு தாவரம் ஆகும். புரோக்கோலி என்ற இந்தப் பெயர், முட்டைக்கோசின் மேலேயுள்ள பூக்கும் பகுதியைக் குறிப்பிடும் இத்தாலியச் சொல்லான ப்ரோக்கோலோ (broccolo) வின் பன்மைச் சொல்லில் இருந்து வந்தது[3].

இவை பிராசிகா ஒலெரசியா இனத்தின் உட்பிரிவாக கல்டிவர் இனமாக வகைப்படுத்தப்படுகின்றன. ப்ரோக்கோலி அமோகமான மரவடிவம், மலரின் தலைப்பகுதிகள், பொதுவாக பச்சை நிறம், அடர்த்தியான, உண்ணத்தக்க, தடித்த தண்டில் இருந்து மரம்-போன்ற தோற்றத்தில் சீரான கிளைபரப்பிய குருத்துக்கள் போன்ற பண்புகளைப் பெற்றுள்ளன. பெருந்திரளான மலரின் தலைப்பகுதிகள் ஏராளமான இலைகளால் சூழப்பட்டிருக்கும். ப்ரோக்கோலி, காலிபிளவருடன் மிகவும் நெருங்கிய அளவில் ஒத்திருக்கும். அது இதே பொதுவகையில் மாறுபட்ட கல்டிவர் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் ப்ரோக்கோலி பச்சை நிறத்தில் இருக்கும். காலிபிளவர் வழக்கமான வெள்ளை வகையுடன் ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கலாம்.

வரலாறு[தொகு]

ப்ரோக்கோலி ஐரோப்பா கண்டத்தில் கட்டற்ற முட்டைக்கோசுத் தாவரத்திலிருந்து தோன்றியது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது காய்கறியாகச் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரிகிறது.[4] ரோமானியப் பேரரசில் இருந்து ப்ரோக்கோலி தனித்துவம் வாய்ந்த மதிப்புடைய உணவாக இத்தாலியர்களுக்கு இடையில் கருதப்படுகிறது.[5] இங்கிருந்து சென்று குடியேறியோரால் ப்ரோக்கோலி அமெரிக்காவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1920கள் வரை அங்கு அது பரவலாகத் தெரிந்திருக்கவில்லை.[4] அமெரிக்காவில் 1806 ஆம் ஆண்டில் அதற்கு பச்சை ப்ரோக்கோலி என்று பெயரிடப்பட்டு அது ஒரு காய்கறியாக முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.[5]

பயன்கள்[தொகு]

சமையல்[தொகு]

ப்ரோக்கோலி பொதுவாக வேகவைக்கப்படுகிறது அல்லது சூடாக்கப்படுகிறது. ஆனால் இதை பச்சையாகவும் உண்ணலாம். மேலும் இது ஹார்ஸ்-டி'ஓய்வூர் தட்டுகளில் ஒரு பச்சைக்காய்கறியாக பிரபலமாக இருக்கிறது. எனினும் இதை வேகவைப்பதால் ப்ரோக்கோலியில் இருப்பதாகக் கருதப்படும் புற்றுநோய்க்கு எதிரான சேர்மத்தின் நிலைகள் குறைந்துவிடுவது தெரியவந்தது. சூடாக்குதல், மைக்ரோவேவிங் மற்றும் கிளரி-வறுத்தல் போன்ற மற்ற தயாரிப்பு முறைகளில் இந்த சேர்மத்தின் இருப்பு குறைந்துவிடுவது தெரியவந்தது.[6]

ஊட்டச்சத்து மற்றும் மருத்துவம்[தொகு]

Broccoli, raw (edible parts), 100g
உணவாற்றல்141 கிசூ (34 கலோரி)
6.64 g
சீனி1.7 g
நார்ப்பொருள்2.6 g
0.37 g
2.82 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(4%)
31 மைகி
(3%)
361 மைகி
1121 மைகி
தயமின் (B1)
(6%)
0.071 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(10%)
0.117 மிகி
நியாசின் (B3)
(4%)
0.639 மிகி
(11%)
0.573 மிகி
உயிர்ச்சத்து பி6
(13%)
0.175 மிகி
இலைக்காடி (B9)
(16%)
63 மைகி
உயிர்ச்சத்து சி
(107%)
89.2 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(5%)
47 மிகி
இரும்பு
(6%)
0.73 மிகி
மக்னீசியம்
(6%)
21 மிகி
பாசுபரசு
(9%)
66 மிகி
பொட்டாசியம்
(7%)
316 மிகி
துத்தநாகம்
(4%)
0.41 மிகி
நீர்89.30g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

ப்ரோக்கோலியில் C, K மற்றும் A போன்ற வைட்டமின்கள் அத்துடன் ஊட்டமுறை ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; இது டையின்டோலிமீத்தேன் மற்றும் குறைந்த அளவிலான செலினியம் போன்ற புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல்மிக்க பண்புகளுடன் பல்வேறு ஊட்டச்சத்துள்ள பொருட்களையும் கொண்டுள்ளது.[7] ஒரு முறை பரிமாறப்படும் இதில் 30 மிகி க்கும் அதிகமான வைட்டமின் C இருக்கிறது. மேலும் அரை-கோப்பை அளவில் 52 மிகி வைட்டமின் C இருக்கிறது.[8] ப்ரோக்கோலியில் காணப்படும் 3,3'-டையின்டோலிமீத்தேன் நச்சு எதிர்ப்பு, நுண்ணியிரிகள் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் உள்ளார்ந்த நோய்த்தடுப்பு பிரதிவினை முறையின் ஆற்றல்மிக்க சரிபடுத்தும் பொருளாகவும் இருக்கிறது.[9][10] ப்ரோக்கோலியில் கூட்டு குளுக்கொராபனினும் அடங்கியிருக்கிறது. இது புற்றுநோய்க்கு எதிரான கூட்டு சல்ஃபோராபனுடன் சேர்ந்து செயல்படலாம். எனினும் ப்ரோக்கோலியின் நன்மைகள் காய்கறியை பத்து நிமிடங்களுக்கும் மேலாக வேகவைப்பதன் மூலமாக அதிகளவில் குறைந்துவிடலாம்.[6] அதிகளவில் உட்கொள்ளப்படும் ப்ரோக்கோலியினால் வலிந்து தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் இடர்பாடு குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[11] ப்ரோக்கோலி உண்ணுவதால் இதய நோய்களைத் தடுப்பதற்கும் உதவுவதாகத் தெரியவந்துள்ளது.[12]

வகைகள்[தொகு]

ப்ரோக்கோலியில் மூன்று பொதுவாக வளரும் வகைகள் இருக்கின்றன. மிகவும் பிரபலமான வகை பிரிட்டனில் சில நேரங்களில் காலப்ரெஸ் என்றும் வட அமெரிக்காவில் எளிமையாக "ப்ரோக்கோலி" என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரிதான (10 இருந்து 20 செமீ வரை) பச்சைத் தலைப்பகுதிகள் மற்றும் தடிமனான தண்டுகள் உடையது. மேலும் இது இத்தாலியில் காலப்ரியா எனப்படுகிறது. இது குளிர் பருவ வருடாந்திரப் பயிர் ஆகும்.

குருத்து ப்ரோக்கோலி மெல்லிய தண்டுகளுடன் அதிகளவிலான தலைப்பகுதிகள் உடையதாக இருக்கும். இது மே மாதத்தில் பயிரிடப்பட்டு குளிர்காலம் அல்லது தொடர்ந்த ஆண்டின் தட்ப வெப்பநிலை சார்ந்து முன்னதாக அறுவடை செய்யப்படும். இந்த வகையில் பரம்பரை வகை "காலப்ரெஸ்" வட அமெரிக்காவில் கிடைக்கிறது.

ரோமன்ஸ்கோ ப்ரோக்கோலி அதன் தலைப்பகுதியில் வெளிப்படையான ஃபிராக்டல் தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மஞ்சள்-பச்சை நிறங்களில் இருக்கும். இது தாவரவியல் ரீதியாக போர்ட்ரிடிஸ் (காலிஃபிளவர்) கல்டிவர் இனத்தைச் சேர்ந்தது.

ஊதா காலிஃபிளவர் தெற்கு இத்தாலி, ஸ்பெயின் மற்றும் யுனைட்டட் கிங்டம் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும் ப்ரோக்கோலி வகையாகும். இது காலிஃபிளவர் போன்ற தலைப்பகுதி வடிவத்தைக் கொண்டது. ஆனால் சிறிய பூ மொட்டுக்களைக் கொண்டிருக்கும். இது எப்போதுமல்லாமல் சில நேரங்களில் பூ மொட்டுகளின் முனைகளில் ஊதா நிறத்தைக் கொண்டிருக்கும்.

மற்ற கல்டிவர் இனங்கள், முட்டைக்கோசு (கேபிட்டாட்டா இனம்), காலிஃபிளவர் (போர்ட்ரிடிஸ் இனம்), காலெ மற்றும் கொல்லார்ட் க்ரீன்ஸ் (ஆசெப்பாலா இனம்), கோல்ராபி (கோங்கிலோட்ஸ் இனம்) மற்றும் ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் (ஜெம்மிஃபெரா இனம்) உள்ளிட்ட ப்ராஸ்ஸிகா ஒலெராசியா ஆகும். சீன ப்ரோக்கோலியும் (அல்போக்லாப்ரா இனம்) கூட ப்ராஸ்ஸிகா ஒலெராசியா கல்டிவர் இனத்தைச் சார்ந்ததாகும்.[13]

உற்பத்தி[தொகு]

2005 ஆம் ஆண்டில் காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி வெளியீடு

வட அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் இது முதன்மையாக உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய விவசாய புள்ளியியல் சேவை, USDA வின் படி 2004 ஆம் ஆண்டில் இதன் பருவம் சார் சராசரி f.o.b. ஏற்றுமதி விலை 100 பவுண்டுகளுக்கு $33.00 ஆக ($0.73/கிகி) இருந்தது.

சிறந்த பத்து காலிஃபிளவர்கள் மற்றும் ப்ரோக்கோலி உற்பத்தியாளர்கள் — 11 ஜூன் 2008
நாடு உற்பத்தி (டன்களில்) அடிக்குறிப்பு
 சீனா 8,585,000 F
 இந்தியா 5,014,500
 ஐக்கிய அமெரிக்கா 1,240,710
 எசுப்பானியா 450,100
 இத்தாலி 433,252
 பிரான்சு 370,000 F
 மெக்சிக்கோ 305,000 F
 போலந்து 277,200
 பாக்கித்தான் 209,000 F
 ஐக்கிய இராச்சியம் 186,400
 உலகம் 19,107,751 A
வெறுமை = அதிகாரப்பூர்வ மதிப்பு, P = அதிகாரப்பூர்வ மதிப்பு, F = FAO தோராய மதிப்பீடு, * = அதிகாரப்பூர்வமற்ற/பாதி-அதிகாரப்பூர்வ/பிரதிபலிப்புத் தரவு, C = கணக்கிடப்பட்ட மதிப்பு A = தொகுப்பு (அதிகாரப்பூர்வமானது, பாதி-அதிகாரப்பூர்வமானது அல்லது தோராய மதிப்பீடுகள் உள்ளடங்கியவையாக இருக்கலாம்);
ஆதாரம்: யுனைட்டட் நேசனின் உணவு மற்றும் விவசாய அமைப்பு: பொருளாதாரம் மற்றும் சமூகத் துறை: புள்ளியியல் பிரிவு

வேளாண்மை[தொகு]

ப்ரோக்கோலி ஒரு குளிர்-தட்பவெப்பநிலைப் பயிர் ஆகும். இவை வெப்பமான கோடை கால தட்பவெப்பநிலையில் வளராது. சராசரி நாளின் வெப்பநிலை 65 மற்றும் 75 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு இடையில் (18 இலிருந்து 23 வரையிலான டிகிரி செல்சியஸ்) இருக்கும் போது ப்ரோக்கோலி நன்றாக வளரும்.[14]

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

 1. Buck, P. A. "Origin and Taxonomy of Broccoli" (PDF). Department of Food Technology, University of California. பார்க்கப்பட்ட நாள் 2009-05-14.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. Stephens, James. "Broccoli — Brassica oleracea L. (Italica group)". University of Florida. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2009-05-14.
 3. "broccoli". Merriam-Webster's Collegiate Dictionary (11th). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780877798095. அணுகப்பட்டது 24 August 2009. 
 4. 4.0 4.1 Murray, Michael (September 2005). The Encyclopedia of Healing Foods. Simon & Schuster Adult Publishing Group. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780743480529. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 5. 5.0 5.1 Nonnecke, Ib (November 1989). Vegetable Production. Springer-Verlag New York, LLC. p. 394. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780442267216.
 6. 6.0 6.1 Warwick Medical School, University of Warwick (2007-05-15). "Research Says Boiling Broccoli Ruins Its Anti Cancer Properties". http://www2.warwick.ac.uk/newsandevents/pressreleases/research_says_boiling/. 
 7. "WHFoods: Broccoli". George Mateljan Foundation. Archived from the original on 2014-06-21. பார்க்கப்பட்ட நாள் 2009-05-11.
 8. அன்டர்ஸ்டேண்டிங் நியூட்ரிசன், எலீனர் என். ஒயிட்னி மற்றும் எவா எம். என். ஹேமில்டன், டேபிள் எச், பிற்சேர்க்கை, பக்கம் 373 அட்டவனை 1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8299-0419-0
 9. "Diindolylmethane Information Resource Center at the University of California, Berkeley". பார்க்கப்பட்ட நாள் 2007-06-10.
 10. "Diindolylmethane Immune Activation Data Center". Archived from the original on 2007-09-06. பார்க்கப்பட்ட நாள் 2007-06-10.
 11. Kirsh, VA; Peters U, Mayne ST, Subar AF, Chatterjee N, Johnson CC, Hayes RB (2007). "Prospective study of fruit and vegetable intake and risk of prostate cancer". Journal of the National Cancer Institute 99 (15): 1200–9. doi:10.1093/jnci/djm065. பப்மெட்:17652276. 
 12. Clout, Laura (5 September 2009). "Broccoli beats heart disease". Daily Express. http://www.express.co.uk/posts/view/125136/Broccoli-beats-heart-disease. பார்த்த நாள்: 5 September 2009. 
 13. Dixon, G.R. (2007). Vegetable brassicas and related crucifers. Wallingford: CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780851993959.
 14. Smith, Powell (June 1999). "HGIC 1301 Broccoli". Clemson University. பார்க்கப்பட்ட நாள் 25 August 2009.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_பூக்கோசு&oldid=3561441" இலிருந்து மீள்விக்கப்பட்டது