புரூசு லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புரூஸ் லீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
புரூஸ் லீ
Bruce Lee
Bruce Lee - son.jpg
நடிகர்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 27, 1940(1940-11-27)
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு 20 சூலை 1973(1973-07-20) (அகவை 32)
ஹொங்கொங்

லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார்.[1] இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்[2]. 20-ஆம் நூற்றாண்டின் பரப்பிசை பண்பாடு கால குறி உருவமாகப் பார்க்கப்பட்டார்.[3][4]

புரூச் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார்.[5] இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது.[6]

இவர் 1971 இல் லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 இல் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில்[7] வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார்.[8] இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார்.[9] புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார்.[10]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

புரூஸ் லீ நவம்பர் 27, 1940 இல் சான் பிரான்சிஸ்கோ, சீன நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். சீன சோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன சோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது[11]. புரூஸ் லீ மற்றும் இவரது பெற்றோர் , இவருக்கு மூன்று வயது இருக்கும் போது மீண்டும் ஆங்காங்கிற்கு சென்றனர்.[12]

புரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுன் ஹான் சீனர், தாய் கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்[13].கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் ஆங்காங்கின் குறிப்பிடத் தகுந்த தொழில் முனைவோர், மற்றும் வள்ளல் ஆவர்.[14] புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூச் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Bruce Lee

சான்றுகள்[தொகு]

 1. "Jun Fan Jeet Kune Do". Bruce Lee Foundation. மூல முகவரியிலிருந்து July 23, 2010 அன்று பரணிடப்பட்டது.
 2. "Bruce Lee Lives Documentary". மூல முகவரியிலிருந்து June 29, 2012 அன்று பரணிடப்பட்டது.
 3. "Bruce Lee's 70th birth anniversary celebrated". The Hindu (India). November 30, 2010. Archived from the original on October 25, 2012. http://www.thehindu.com/arts/cinema/article923515.ece?homepage=true. பார்த்த நாள்: June 3, 2011. 
 4. "From Icon to Lifestyle, the Marketing of Bruce Lee". The New York Times. December 11, 2009. https://www.nytimes.com/2009/12/12/business/global/12iht-lee.html. பார்த்த நாள்: June 3, 2011. 
 5. Lee 1989, p. 41
 6. "Bruce Lee inspired Dev for martial arts". The Times of India. July 1, 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-07-01/news-interviews/28300963_1_martial-arts-dev-patel-bruce-lee. பார்த்த நாள்: June 3, 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
 7. "How Bruce Lee changed the world-Series". The Hindu (India). May 29, 2011. Archived from the original on October 25, 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2058091.ece. பார்த்த நாள்: June 3, 2011. 
 8. Dennis 1974
 9. Bruce Lee Archived November 23, 2012, at the வந்தவழி இயந்திரம். at Hong Kong Cinemagic. (look under the 'nationality' section)
 10. Chu, Karen (June 26, 2011). "Proposed Bruce Lee Museum Shelved in Hong Kong". The Hollywood Reporter. Archived from the original on October 16, 2015. http://www.hollywoodreporter.com/news/proposed-bruce-lee-museum-shelved-205740. 
 11. "Biography". Bruce Lee Foundation. மூல முகவரியிலிருந்து August 22, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் June 7, 2010.
 12. "Bruce Lee: Biography". Bruce-lee.ws. பார்த்த நாள் January 22, 2010.
 13. Description of the parent's racial makeup as described by Robert Lee at minute mark 3:35 in the cable television documentary, First Families: Bruce Lee, which premiered on Fox Family on October 26, 1999.
 14. "Kom Tong Hall at 7 Castle Road, Mid-levels, Hong Kong". People's Republic of China. மூல முகவரியிலிருந்து June 12, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 12, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூசு_லீ&oldid=2789353" இருந்து மீள்விக்கப்பட்டது