பி. வீரசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி.வீரசேனன் (P. Veerasenan) சிங்கப்பூரைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க ஒரு தொழிற்சங்கவாதியாவார்.இவர் முன்னோர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் போது நாகப்பட்டினத்திலிருந்து கப்பல் மூலம் தோட்டதொழிலாளர்களாவும், ரயில்வே தொழிலாளர்களாவும் இலங்கை, மியான்மார், மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் குடியமர்த்தப் பட்டனர்.இவரது தந்தைப்பெயர் செட்டிப்புலம் மொட்டைபழனி.இவரது பெற்றோர் இவருக்கு தங்கள் குலத் தெய்வமாகிய |தெற்குவீரன் பெயரினை வீரசிங்கன் என வைத்தனர். வீரசேனன் இவர் சிங்கப்பூர் பொது தொழிலாளர் சங்கத்தின் நிலைக் குழுவின் தலைவராகவும், சிங்கப்பூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது வாழ்க்கையில், பான் மலேசியத் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் எசு.ஏ கணபதி மற்றும் மலாயா பொதுவுடமைக் கட்சியின் (சிபிஎம்) தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளராக உள்ளவருமான அப்துல்லா சிடி ஆகியோருடன் இவர் நட்புறவில் இருந்தார். [1]

அரசியல் செயல்பாடு[தொகு]

கணபதியை தொடர்ந்து பான் மலாயன் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராக வீரசேனன் பதவியேற்றார். 1946 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று இவரது தலைமையில் சிங்கப்பூர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சிங்கப்பூரில் 5000 பேரின் பெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. வீரசேனன் மலாயன் அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். மலாயாவுக்கு அதிகமான இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கும் கண்டனம் தெரிவித்தார். இந்திய தொழிலாளர்களிடையே ஆல்ககால் தயாரிப்புகளைத் தடை செய்வதையும் இவர் ஆதரித்தார். ஏனெனில் இது தொழிலாளர்கள் மீது பாதகமான விளைவை ஏற்படுத்தும் எனக் கருதினார். மலேயாவில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஆலோசனைக் குழுவையும் வீரசேனன் கண்டனம் செய்தார். இந்திய அரசு, இந்திய தேசிய காங்கிரசு , இந்திய பொதுவுடமைக் கட்சி மற்றும் அகில இந்திய முசுலீம் லீக் கட்சி ஆகிய அமைப்புகளுக்கு, மலாயாவிற்கு இந்தியர்களின் உத்தேச வருகையை இருமுறை சரிபார்க்குமாறு சிங்கப்பூர் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. [2]

இறப்பு[தொகு]

19 மார்ச் 1949 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் தேதியன்று எசுஏ கணபதி ராவாங்கில் உள்ள நீர்வீழ்ச்சி தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1949 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியன்று இவரது நண்பர் எசு.ஏ.கணபதி தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது முகாம் மலையன் இனங்கள் விடுதலை இராணுவத்தின் முதல் படைப்பிரிவு தலைமையகம் என்று இராணுவ பேச்சாளரால் விவரிக்கப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.malaya-ganapathy.com/2009/09/p-veerasenan_12.html
  2. http://www.malaya-ganapathy.com/2015/05/stop-indian-labourers-immigration-to.html
  3. http://www.malaya-ganapathy.com/2009/09/p-veerasenan.html

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வீரசேனன்&oldid=3663190" இருந்து மீள்விக்கப்பட்டது