அப்துல்லா சிடி
அப்துல்லா சிடி Abdullah CD | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சிக் டாட் பின் அஞ்சாங் அப்துல்லா 2 அக்டோபர் 1923 லம்போர் கிரி, பாரிட், பேராக், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா |
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
மலாய் தேசிய கட்சி; மலாயாவின் புரட்சிகர மலாய் தேசியக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சூரியானி அப்துல்லா
(தி. 1955; இற. 2013) |
பிள்ளைகள் | 1 மகள் |
இருப்பிடம் | சுக்கிரின், தாய்லாந்து |
கல்வி | கிளிபர்ட் பள்ளி, கோலாகங்சார் |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | மலாயா தேசிய விடுதலை இராணுவம் |
பணி ஆண்டுகள் | 1949 - 1989 |
படையணி | 10-ஆவது மலாய்ப் படை |
சமர்கள்/போர்கள் | மலாயா அவசரகாலம்;
|
அப்துல்லா சிடி அல்லது சிக் டாட் பின் அஞ்சாங் அப்துல்லா, (மலாய்: Abdullah CD அல்லது Cik Dat bin Anjang Abdullah; ஆங்கிலம்: Abdullah CD); என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி; மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் (Communist Party of Malaya) (CPM) பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.[1]
வாழ்க்கை வரலாறு[தொகு]
அப்துல்லா சிடி, 1923 அக்டோபர் 2-ஆம் தேதி, பேராக், பாரிட் நகர்ப் பகுதியில் மினாங்கபாவு (Minangkabau) பெற்றோருக்குப் பிறந்தார். 1880-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான மகா ராசாலேலா போர்களில் (Maharajalela Wars) இருந்த ஆர்வங்களால் அவரும் மலாயா விடுதலைக் கொள்கையில் ஈர்க்கப்பட்டார்.[2][3]
பேராக், பாசிர் சாலாக் (Pasir Salak) எனும் இடத்தில் பிரித்தானிய ஆணையர் ஜேம்சு பர்ச் (James Wheeler Woodford Birch) என்பவர்; மகாராசா லேலா (Maharaja Lela) என்பவரால் 1875 நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இளம் மலாயர் ஒன்றியம்[தொகு]
இளைஞனாக இருந்த போது, அவர் ’இளம் மலாயர் ஒன்றியம்’ அமைப்பில் (Kesatuan Melayu Muda) சேர்ந்தார். மேலும் சப்பானிய ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டங்களில் பேராக்கில் உள்ள லம்போர் மாவட்டத்தில் இளம் மலாய் ஒன்றியத்தின் செயலாளராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அக்டோபர் 1945-இல் மலாய் தேசியக் கட்சியை (மலாய்: Parti Kebangsaan Melayu Muda அல்லது Cik Dat bin Anjang Abdullah; ஆங்கிலம்: Malay Nationalist Party); அமைப்பதில் அப்துல்லா சிடி ஈடுபட்டார்.
அகமது போசுதமாம்[தொகு]
மலாய் தொழிலாளர் இயக்கத்தை ஒழுங்கு அமைப்பதற்கும் அவர் பொறுப்பு ஏற்றார். மேலும் அகில மலாயா தொழிற்சங்கங்களின் (Pan-Malayan Federation of Trade Unions) துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலாயாவின் பிரித்தானிய காலனித்துவ அரசு மலாயா அவசரநிலையை பிரகடனப் படுத்தியது. அதற்கு சிறிது காலத்திற்கு முன்பு, அப்துல்லா சிடி, டாக்டர் புர்கானுதீன் எல்மி மற்றும் அகமது போசுதமாம் ஆகியோர் மலாயா சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினர்.
மலாயா அவசரகாலம்[தொகு]
பிரித்தானியர்கள் மலாயா அவசரநிலையை அறிவித்த போது, அப்துல்லா சிடி, மலாயா கம்யூனிஸ்டு கட்சி; அங்காத்தான் மூடா இன்சாப் (Angkatan Pemuda Insaf) அமைப்பின் உறுப்பினர்கள் பலரை மலாயா காடுகளில் பிரித்தானிய எதிர்ப்பு கெரில்லா புரட்சியில் (Anti-British Guerrilla Revolution) ஈடுபடுத்தினார். ஜூலை 1948 இல், வடக்கு பகாங்கில் பிடிபட்டார். ஆனாலும் அவர் தப்பித்தார்.
12 மே 1949-இல், பகாங், தெமர்லோவில் மலாயா பிரித்தானிய கட்சியின் 10-ஆவது படைப் பிரிவைத் (10th Regiment of the CPM) தொடக்கினார். மேலும் 1989-ஆம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்தார்.
அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தம்[தொகு]
பற்பல போராட்டங்களுக்குப் பிற்கு, 1989 டிசம்பர் 2-ஆம் தேதி, மலேசிய அரசாங்கத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் (Peace Agreement of CPM - Government of Malaysia) கையெழுத்திட்டார். அதன் பின்னர் மலேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
அப்துல்லா சிடி, மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கு எதிராகப் பல ஆயுதப் போர்களில் ஈடுபட்டார். அந்தப் போர்களில் பலத்த காயங்களுக்கும் உள்ளானார்.
சூரியானி அப்துல்லா[தொகு]
மலாயா பிரித்தானிய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த சூரியானி அப்துல்லா (Suriani Abdullah) எனும் நீ எங் மிங் சிங் (née Eng Ming Ching) என்பவரை பிப்ரவரி 1955-இல் மணந்தார். போர் அமைதிக்குப் பின்னர், இருவரும் அவர்கள் தாய்லாந்து, சுக்கிரின் எனும் பகுதியில் வாழ்ந்தனர். 2013-இல் சூரியானி மரணம் அடைந்தார். அப்துல்லா சிடி இன்னும் அங்கு வாழ்ந்து வருகிறார்.
மேலும் காண்க[தொகு]
- மலாயா அவசரகாலம்
- பாலிங் பேச்சு
- மலாயா தேசிய விடுதலை இராணுவம்
- மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Abdullah CD, the leader of the 10th Regiment of the PKM, who is now 96 years old and suffers from speech problems". 21 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ishak Saat, Radikalisme Melayu Perak 1945–1970, USM, 2014
- ↑ Suriani Abdullah(1999), Rejimen Ke-10 dan Kemerdekaan, Nan Dao Publisher