உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேமலதா அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேமலதா அகர்வால்
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதினை 2017இல் திருமதி. பிரேமலதா அகர்வாலுக்கு வழங்குகிறார்.
பிறப்புபிரேமலதா கார்க்
1963 (அகவை 60–61)
டார்ஜீலிங், மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
பணிமலையேற்றம்
அறியப்படுவதுஎவரெசுட்டு சிகரத்தை (2011) தனது 48 வயதில் எட்டிய வயதான இந்தியப் பெண்மணி - உலகின் ஏழு மிக உயர்ந்த கண்டச் சிகரங்களான ஏழு கொடுமுடிகளை தொட்ட முதல் இந்தியப் பெண்
வாழ்க்கைத்
துணை
விமல் அகர்வால்

பிரேமலதா அகர்வால் (Premlata Agrawal) (பிறப்பு 1963) உலகின் ஏழு மிக உயர்ந்த கண்டச் சிகரங்களான ஏழு கொடுமுடிகளை தொட்ட முதல் இந்தியப் பெண்ணாவார். [1] மலையேற்றத்தில் இவர் செய்த சாதனைகளுக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருதையும் 2017 இல் டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதையும் வழங்கியது . [2] 20 மே 2011 அன்று, உலகின் மிக உயரமான சிகரமான எவரெசுட்டு சிகரத்தை (8,848 உயரம் மீட்டர் /29,029 அடி) எட்டிய வயதான இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். ஜம்மு-காஷ்மீரைச் சங்கீதா சிந்தி பகல் இவரது இந்தச் சாதனையை 19 மே 2018 அன்று முறியடித்து எவரெஸ்ட் சிகரத்தை 53 வயதில் எட்டிய மிக வயதான இந்தியப் பெண்மணி ஆனார். சார்கண்ட் மாநிலத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார் .

இதற்கு முன்பு, இவர் 2004இல் நேபாளத்தில் (20,600 அடி) தீவுச் சிகரத்தை அடையும் பயணத்தில் இருந்தார். 2006இல் காரகோரம் கணவாயையும் (18,300 அடி), சால்டோரோ காங்ரி (20,150 அடி) மலைச் சிகரத்தையும் அடைந்தார். 2007ஆம் ஆண்டில் முதல் இந்திய மகளிர் தார் பாலைவன பயணத்தில் பங்கேற்றார். மீண்டும் 2015இல்; குசராத்தின் புஜ் முதல் பஞ்சாபின் வாகா எல்லை (இந்திய-பாக்க்கித்தான் எல்லை) வரை 40 நாள் ஒட்டகப் பயணத்தையும் மேற்கொண்டார். இவரது சாதனைகள் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. [3] [4] [5]

தொழில்[தொகு]

ஜம்சேத்பூரில் ஒரு மலையேறும் போட்டியில் பங்கேற்ற பின்னர், தனது 36 வயதில் மலையேற்றத்தைத் தொடங்கினார். பின்னர் 1984ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பால் அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டார் [6] [7]

இவர் தற்போது டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சாகச பிரிவில் ஒரு அதிகாரியாக பணிபுரிகிறார்.

ஏழு கொடுமுடிகள்[தொகு]

உலகின் ஏழு மிக உயர்ந்த கண்டச் சிகரங்களான ஏழு கொடுமுடிகளை தொட்ட விவரம் [8]

வரிசை எண். படம் சிகரம் உயரம் கண்டம் சிகரத்தை அடைந்த நாள்
1 எவரெசுட்டு சிகரம் 8,848 m (29,029 அடி) ஆசியா மே 20, 2011
2 அக்கோன்காகுவா 6,961 m (22,838 அடி) தென் அமெரிக்கா பிப்ரவரி 10, 2012
3 டெனாலி 6,194 m (20,322 அடி) வட அமெரிக்கா மே 23, 2013
4 கிளிமஞ்சாரோ மலை 5,895 m (19,341 அடி) ஆப்பிரிக்கா சூன் 6, 2008
5 எல்ப்ரஸ் மலை 5,642 m (18,510 அடி) ஐரோப்பா ஆகத்து 12, 2012
6 வின்சன் மலைத்திரள் 4,892 m (16,050 அடி) அந்தாட்டிக்கா சனவரி 5, 2013
7 புன்கக் ஜெயா 4,884 m (16,024 அடி) ஆத்திரேலியா அக்டோபர் 22, 2013

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை ராமவ்தார் கார்க் ஒரு தொழிலதிபர். தற்போது பிரேம்லதா டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஒரு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜுக்சலை நகரில் வசித்து வருகிறார். இவர்,மூத்த பத்திரிகையாளரான விமல் அகர்வால் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். [9]

ஊடகங்களில்[தொகு]

இவர், 2012ஆம் ஆண்டில் இண்டியாடைம்ஸ். காம் என்ற இணைய தளத்தின் இந்தியாவின் சிறந்த பெண் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றார். [10] சமீபத்தில், டாடா உப்பு விளம்பரத்தின் இந்தியாவின் வலிமையான இரும்புப் பெண்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்படத்தில் இவர் இடம்பெற்றார். [11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mountaineer Premlata scales seven summits - The Times of India". The Times of India. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-06-25.
 2. "Padma Awards". pib. 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.
 3. . 
 4. "45-year-old housewife to climb Mount Everest". இந்தியன் எக்சுபிரசு. 7 Mar 2011. http://www.indianexpress.com/news/45yearold-housewife-to-climb-mount-everest/758981/. 
 5. "Mother of two becomes oldest Indian woman to climb Mount Everest". என்டிடிவி. 20 May 2011. http://www.ndtv.com/article/india/mother-of-two-becomes-oldest-indian-woman-to-climb-mount-everest-107224. 
 6. Shekhar, Shashank; Thaker, Jayesh (3 June 2011). "‘Sherpas were sending me back’". Calcutta, India: The Telegraph. http://www.telegraphindia.com/1110603/jsp/frontpage/story_14065257.jsp. 
 7. "Premlata oldest Indian woman to scale Everest". சிஎன்என்-ஐபிஎன். 1 Jun 2011 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604154624/http://ibnlive.in.com/news/45-yearold-indian-woman-scales-mt-everest/155804-3.html. 
 8. "Premlata Agarwal- seven-summits climbing details -". www.indianexpress.com.
 9. "Premlata Agarwal becomes oldest Indian woman to scale Mt Everest". DNA. 20 May 2011. http://www.dnaindia.com/india/report_premlata-agarwal-becomes-oldest-indian-woman-to-scale-mt-everest_1545687. "Premlata Agarwal becomes oldest Indian woman to scale Mt Everest". DNA. 20 May 2011.
 10. "I-Day Special: India's Top 10 Women Achievers". பார்க்கப்பட்ட நாள் 2016-06-25.
 11. Tata Salt (2016-06-01), Iron Strong Women of India - Scaling New Heights, பார்க்கப்பட்ட நாள் 2016-06-25

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமலதா_அகர்வால்&oldid=3563677" இலிருந்து மீள்விக்கப்பட்டது