உள்ளடக்கத்துக்குச் செல்

பிராசிகா இராபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராசிகா இராபா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. rapa
இருசொற் பெயரீடு
Brassica rapa
L.[1]
Brassica rapa,யப்பானிய வேளாண் கலைக்களஞ்சியமான 'Seikei Zusetsu
சிறு வெள்ளைப்பட்டாம்பூச்சி (Pieris rapae)

பிராசிகா இராபா (தாவரவியல் பெயர்: Brassica rapa ) என்பது பூக்கும் தாவரங்களில் ஒன்றாகும். இதன் தாவரக்குடும்பம் கடுகுக் குடும்பம் (Brassicaceae) ஆகும். இதன் பேரினம், பிராசிகா என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினத்தில் 42 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு இனமான இத்தாவரத்தில் பல உள் இனங்களின் வகைகள், தாவரவியல், மரபியல் நுட்பங்களால் உருவாக்கப் பட்டுள்ளன. அவைகள் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இதன் இலைகள், காய்கறியாகப் பயன்படுகின்றன. இந்த இனத்தினை, 1753 ஆம் ஆண்டு முதன்முதலாகக் கண்டறிந்தவர் கார்ல் லின்னேயசு ஆவார். பன்னாட்டு தாவரவியல் பெயர் சுருக்க முறைமையில் L. என்று குறிப்பர். இந்த இனத்திற்கு 251 வேறு பெயர்கள் உள்ளன. [2]

இவ்வினத்தின் பயிர் வகைகள்

[தொகு]
இனப்பயிர்கள் படம் தாவரவியல் பெயர் குறிப்புகள்
போக் சொய் Brassica rapa subsp. chinensis சீன முட்டைகோசு வகை
இளவேனில் இலைக்கோசு Brassica rapa var. glabra
பூக்கும் சீன இலைக்கோசு Brassica rapa subsp. parachinensis
வயல் கடுகு Brassica rapa subsp. oleifera
கோமட்சுனா Brassica rapa subsp. perviridis
மிசூனா Brassica rapa var. nipposinica
நபா இலைக்கோசு Brassica rapa subsp. pekinensis
இராபினி Brassica rapa var. ruvo
தட்சோய் Brassica rapa subsp. narinosa ஆசிய நாடுகள் பயன்பாடு அதிகம்.
கோசுக்கிழங்கு Brassica rapa subsp. rapa பேச்சு:கோசுக்கிழங்கு
மஞ்சள் கடுகுக்கீரை Brassica rapa subsp. trilocularis [3] ஆங்கில விக்கியில் இல்லை

இதையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brassica rapa L." Plants of the World Online. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2024.
  2. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:279485-1#synonyms
  3. https://temperate.theferns.info/plant/Brassica+rapa+trilocularis

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராசிகா_இராபா&oldid=3931521" இலிருந்து மீள்விக்கப்பட்டது