நபா இலைக்கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபா இலைக்கோசுகள்
Napa cabbages
இனம்பிராசிகா இராபா
பயிரிடும்வகைப் பிரிவுPekinensis குழு
தோற்றம்15ஆம் நூற்றாண்டு சீனா

நபா இலைக்கோசு (தாவரவியல் பெயர்: Brassica rapa subsp. pekinensis அல்லது Brassica rapa Pekinensis குழு) என்பது இலைக்கோசு வகைகளில் ஒன்றாகும். இது முதன்முதலாக பெய்சிங் பகுதியில் பயிரிடப்பட்டதென்பர். பெரும்பான்மையான ஆசிய நாடுகளின் உணவில் இது பயன்படுத்துப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பா, அமெரிக்காக்கள், ஆத்திரேலியா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் பல நாடுகள், இதனைச் சீன இலைக்கோசு என்று அழைப்பர். ஆத்திரேலியாவில் சில நேரங்களில் 'வோம்போக்' ("wombok") என்றழைப்பர்.

பெயர்கள்[தொகு]

பயனிடப் பெயர்கள்
Napa cabbages
சீனப் பெயர்
சீன மொழி 大白菜
Literal meaningபெரிய வெள்ளைக் காய்கறி
Hanyu Pinyindàbáicài
Wade–Gilesta4-pai2-ts'ai4
கன்டோனீசயப் பெயர்
பண்டைய சீனம் 紹菜
Jyutpingsiu6 coi3
Yale Romanizationsiuh choi
கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை배추
Hanja白菜
Revised Romanizationbaechu
McCune–Reischauerpaech'u
சப்பானியப் பெயர்
Kanji 白菜
ஹிரகனா எழுத்துக்கள் はくさい
Revised Hepburnhakusai

சப்பானிய பேச்சு வழக்கில், nappa (菜っ葉) என்ற சொல்லானது எந்த ஒரு காய்கறியின் இலைகளைக் குறிக்கிறது, குறிப்பாக உணவாகப் பயன்படுபவற்றைக் குறிக்கிறது.[1] இந்த குறிப்பிட்ட இலைக்கோசிற்கான சப்பானியப் பெயர் hakusai (白菜), சைனோ-சப்பானிய முறைப்படி (Sino-Japanese reading) சீனப் பெயர் báicài (白菜), வாய்மொழியாக "வெள்ளைக் காய்கறி". இதன் கொரியப் பெயர், baechu (배추), இன்றைய மான்டரின் சீனப் பெயர் dàbáicài (大白菜) என்பதன் பொருள் "பெரிய வெள்ளை காய்கறி", இதன் எதிரான பெயர் "சிறிய வெள்ளைக் காய்கறி" என்பதே போக் சொய் ஆகும். ஆசியாவிற்கு வெளியே, இக்காய்கறியை சீன இலைக்கோசு அல்லது சில சமயங்களில் செலரி (celery) இலைக்கோசு என்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oxford English Dictionary nappa, n.2". பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2024.
  2. "Chi′nese cab′bage". பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2024.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நபா_இலைக்கோசு&oldid=3922629" இலிருந்து மீள்விக்கப்பட்டது