கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
பனை மரத்தினால் செய்யப்பட்ட கதவு மாதிரி
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்கள் மட்டுமல்லாது கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.