பனாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பனாட்டு என்பது பனையில் இருந்து பெறப்படும் ஓர் உணவுப்பொருள் ஆகும்.[1] பனை மரத்திலிருந்து கிடைக்கும் பழம், பனம்பழம் ஆகும்.[2] இந்தப் பனம்பழத்தின் தோலை உரித்து, பழத்தை ஒரு பாத்திரத்திலிட்டு, புளிங்காடி சேர்த்துப் பிசைந்து, ஒரு பனை ஓலைப் பாயில் மென்மையாகத் தடவி, ஞாயிற்றொளியில் காய விட்டு, அது நன்றாகக் காய்ந்த பின், துண்டுதுண்டுகளாக வெட்டி, பனாட்டு ஆக்கப்படும்.[3][4] இதனைச் சமையல் அறைப் புகை கூட்டில் தொங்கவிடுவார்கள். அதை மாரிகாலம் (மழைக்காலம்) சாப்பிடுவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. குமரி அனந்தன் (2010 திசம்பர் 21). "வீணாகும் பனைமரங்கள்!". தினமணி. பார்த்த நாள் 2015 நவம்பர் 20.
  2. அ. அருள்தாசன் (2014 பெப்ரவரி 8). "மருத்துவ குணம் மிக்க `தவுண்’: தென்காசி பகுதியில் விற்பனை மும்முரம்". தி இந்து. பார்த்த நாள் 2015 நவம்பர் 20.
  3. மு. கணபதிப்பிள்ளை (1961). தமிழன் எங்கே?. ஈழமணி நூற் பதிப்பகம். பக். 49. 
  4. "குமரி அனந்தன் திடீர் விரதம்". சிஃபி (2007 சூன் 26). பார்த்த நாள் 2015 நவம்பர் 20.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாட்டு&oldid=3219664" இருந்து மீள்விக்கப்பட்டது