உள்ளடக்கத்துக்குச் செல்

பனங்காய்ப் பணியாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனங்காய்ப் பணியாரம் அல்லது பனங்காய்ப் பணிகாரம் என அழைக்கப்படுவது, பனம்பழத்தின் களியில் இருந்து செய்யப்படும் ஒருவகை உணவுப் பண்டம் ஆகும். பனம்பழத்தின் களியை அடுப்பில் இட்டுக் காய்ச்சி, அதனுடன் அரிசி மா, சர்க்கரை போன்றவைகளையும் நீருடன் சேர்த்துப் பிசைந்த கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக எண்ணெயில் பொரிப்பதன் மூலம் இது ஆக்கப்படுகின்றது.

பெருமளவில் பனைகள் காணப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் ஒரு சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனங்காய்ப்_பணியாரம்&oldid=4052215" இலிருந்து மீள்விக்கப்பட்டது