நுபியன் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுபியன் பக்கி
படம், என்றிக் குரோன்வால்டு, துணையினம் ஜோனேசி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்:
பக்கி
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
C. nubicus
இருசொற் பெயரீடு
Caprimulgus nubicus
லைச்டென்செசுடின், 1823

நுபியன் பக்கி (கேப்ரிமுல்கசு நுபிகசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பக்கி சிற்றினம் ஆகும். இது சீபூத்தி, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, இஸ்ரேல், கென்யா, ஓமான், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

நுபியன் பக்கி 20 முதல் 22 செ.மீ. நீளம் உடையது. இது ஒரு இரவு நேரப் பறவையாகும். இது பெரிய கண்கள் மற்றும் பெரிய அலகினைக் கொண்டது. பெரிய அலகு இரவில் இரையினை தேட உதவுகிறது. இப்பறவை மூரிசு பக்கியினை ஒத்திருக்கிறது. ஆனால் சிறியது. மூரிசு பக்கியுடன் ஒப்பிடும்போது சிறிய வால் மற்றும் மழுங்கிய இறக்கைகள் கொண்டது. மற்றொரு சிறப்பியல்பு அம்சமாகக் கழுத்தில் செம்பழுப்பு பட்டை காணப்படும். மற்ற பக்கிகளுடன் ஒப்பிடும்போது வெள்ளை இறக்கை புள்ளிகள் இறக்கையின் நுனியில் இல்லாமல் உட்பகுதியில் காணப்படும்.

நுபியன் பக்கி மேற்குப் பலேர்க்டிக்கில் உள்ள மிகச்சிறிய பக்கியாகும் (ஸ்னோ & பெர்ரின்ஸ், 1998). கிழக்கு ஆபிரிக்காவின் வறண்ட பகுதியில் இந்தச் சிற்றினம் ஒப்பீட்டளவில் பரவலாக உள்ளது (பெர்ல்மான், 2008). மத்திய கிழக்கில், தெற்கு பலத்தீனத்தில் பிளவு பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு அரேபியத் தீபகற்பத்தின் செங்கடல் கடற்கரையில் இது காணப்படுகின்றது (பேர்ட்லைப் இன்டர்நேஷனல், 2012). பறவையின் முந்தைய வரம்பில் சாக்கடல், அகாபா, பிடான் பள்ளத்தாக்கு மற்றும் தசான் ஆகியவை அடங்கும். ஆனால் அது இப்போது வாழ்விட அழிவின் விளைவாக பிஃபா இயற்கை காப்பகம் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Caprimulgus nubicus". IUCN Red List of Threatened Species 2016: e.T22689912A93252462. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689912A93252462.en. https://www.iucnredlist.org/species/22689912/93252462. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுபியன்_பக்கி&oldid=3616809" இலிருந்து மீள்விக்கப்பட்டது