நிசாரி இசுமாயிலி அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாரி இசுமாயிலி அரசு
1090–1273
கொடி of நிசாரி இசுமாயிலி அரசு
இடது:1162 வரையிலான கொடி, வலது:1162க்குப் பிறகான கொடி
தலைநகரம்அலமுத் கோட்டை (பாரசீக அசாசின்கள், தலைமையகம்)
மசையப் கோட்டை(சிரிய அசாசின்கள்)
கில்கித் (தற்போதைய தலைமையகம்)
பேசப்படும் மொழிகள்பாரசீகம் (ஈரானில்)[1]
அரபி (சிரியாவில்)[1]
சமயம்
நிசாரி இசுமாயிலி சியா இசுலாம்
அரசாங்கம்முற்றிலும் இறையியல் முடியாட்சி
பிரபு 
• 1090–1124
அசன்-இ சபா
• 1124–1138
கியா புசுர்க்-உம்மித்
• 1138–1162
முகம்மத் இப்னு புசுர்க்-உம்மித்
• 1162–1166
இமாம் அசன் இரண்டாம் அலா திக்ரிகிசு சலாம்
• 1166–1210
இமாம் இரண்டாம் நூரல்தீன் அலா முகம்மது
• 1210–1221
இமாம் மூன்றாம் சலாலல்தீன் அசன்
• 1221–1255
இமாம் மூன்றாம் அலாவல்தீன் முகம்மது
• 1255–1256
இமாம் ருக்னல்தீன் குர்சா
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• தொடக்கம்
1090
• குலைவு
1273
நாணயம்தினார், திர்காம், மற்றும் பால்சு (ஒருவேளை)[2]
முந்தையது
பின்னையது
சியாரித்து அரசமரபு
சல்லாரித் அரசமரபு
சசுடானிடுகள்
செல்யூக் பேரரசு
செல்யூக் பேரரசு
அர்துகிடுகள்
அடிமை வம்சம்
மங்கோலியப் பேரரசு
ஈல்கானரசு
தற்போதைய பகுதிகள்ஈரான்
ஈராக்கு
சிரியா
பாக்கித்தான்

நிசாரி அரசு என்பது ஒரு சியா நிசாரி இசுமாயிலி அரசு ஆகும். இதை அசன்-இ சபா என்பவர் அலமுத் கோட்டையை 1090ஆம் ஆண்டு கைப்பற்றியதற்குப் பிறகு நிறுவினார். இதற்குப் பிறகு "அலமுத் காலம்" என்று அழைக்கப்பட்ட இசுமாயிலியிய நம்பிக்கையின் காலம் தொடங்கியது. இந்த அரசின் மக்கள் அசாசின்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பாரசீகம் மற்றும் சிரியா முழுவதும் தொடர்ச்சியான காப்பரண்களை இந்த அரசு கொண்டிருந்தது. இந்தக் காப்பரண்களைச் சுற்றி இவர்களின் எதிரிப் பகுதிகள் இருந்தன. செல்யூக் பேரரசுக்கு எதிரான மக்களால் ஆதரவளிக்கப்பட்ட சிறுபான்மையின நிசாரி பிரிவினரின் மத மற்றும் அரசியல் இயக்கத்தின் விளைவாக இந்த அரசு உருவாக்கப்பட்டது. இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், நிசாரிகள் தனித்து இயங்கக்கூடிய கோட்டைகள், வழக்கத்திற்கு மாறான உத்திகள், குறிப்பாக முக்கியமான எதிர்த் தலைவர்களைக் கொல்லுதல் மற்றும் உளவியல் போர்முறையைப் பின்பற்றி எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டனர்.[3][4]:126

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Daftary, Farhad (2007) (in en). The Isma'ilis: Their History and Doctrines. Cambridge University Press. பக். 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-139-46578-6. 
  2. Willey, Peter (2005) (in en). The Eagle's Nest: Ismaili Castles in Iran and Syria. I. B. Tauris. பக். 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781850434641. 
  3. Daftary, Farhad, in Fleet, Kate; Krämer, Gudrun; Matringe, Denis; Nawas, John; Rowson, Everett (eds.). Encyclopaedia of Islam, THREE. Brill Online (2007). "Assassins".
  4. Daftary, Farhad (1998). A Short History of the Ismailis: Traditions of a Muslim Community. Edinburgh: Edinburgh University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781558761933.