உள்ளடக்கத்துக்குச் செல்

அலமுத் கோட்டை

ஆள்கூறுகள்: 36°26′41″N 50°35′10″E / 36.44472°N 50.58611°E / 36.44472; 50.58611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

அலமுத் கோட்டை
الموت
அலமுத் பாறை
அலமுத் கோட்டை is located in ஈரான்
அலமுத் கோட்டை
ஈரானுக்குள் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நிலைமைசிதிலமடைந்தது, பகுதியளவு சீரமைக்கப்பட்டது
வகைகோட்டை
கட்டிடக்கலை பாணிஈரானிய வகை
இடம்அலமுத் பகுதி, கஸ்வின் மாகாணம், ஈரான்
நகரம்மோல்லம் கலயே
நாடுஈரான்
ஆள்கூற்று36°26′41″N 50°35′10″E / 36.44472°N 50.58611°E / 36.44472; 50.58611
நிறைவுற்றது865
அழிக்கப்பட்டது1256

அலமுத் என்பது ஒரு சிதிலமடைந்த மலைக் கோட்டையாகும். பாரசீக மொழியில் இதன் பெயருக்கு பொருள் "கழுகின் கூடு" என்பதாகும். இது ஈரான் நாட்டின் அலமுத் பகுதியில் காஸ்பியன் கடலுக்கு தெற்கே கஸ்வின் மகாணத்தில் ஈரானில் அமைந்துள்ளது. இது தற்போதைய ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

கி. பி. 1090ஆம் ஆண்டு அலமுத் கோட்டையானது நிசாரி இஸ்மாயிலியான ஹசன் இ சபாவின் கட்டுப்பாட்டில் வந்தது. 1256ஆம் ஆண்டுவரை அலமுத் நிசாரி இஸ்மாயிலிகளின் அரசின் தலைமை பகுதியாக செயல்பட்டது. இஸ்மாயிலி அரசுக்கு பாரசீகம் முதல் சிரியா வரை ஆங்காங்கே சிதறி கிடந்தவாறு தொடர்ச்சியான கோட்டைகள் கைவசம் இருந்தன. ஒவ்வொரு கோட்டையை சுற்றிலும் அவர்களுக்கு எதிரானவர்களின் பகுதிகள் இருந்தன.

இக்கோட்டைகளில் மிகப் பிரபலமானதாக அலமுத் திகழ்ந்தது. இக்கோட்டையை எந்த ராணுவ தாக்குதலும். ஊடுருவ முடியாது என்று நினைக்கப்பட்டது. மேலும் அழகான தோட்டங்கள், நூலகம் மற்றம் ஆய்வகங்களுக்காக புகழ் பெற்றதாக இந்த அலமுத் கோட்டை விளங்கியது. இங்கு தத்துவவாதிகள் மற்றும் அறிவியலாளர்கள் சுதந்திரமாக விவாதங்களில் பங்கெடுத்தனர்.[2]

செல்யுக் மற்றும் குவாரசமிய பேரரசு உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து இக்கோட்டை தப்பிப் பிழைத்தது. 1256 ஆம் ஆண்டு ருக்கின் அல்-தின் குர்ஷா இக்கோட்டையை. படையெடுத்து வந்த மங்கோலியர்களிடம் சரணடைய வைத்தார். அவர்கள் இக்கோட்டையை இடித்து அதன் புகழ்பெற்ற நூலக புத்தகங்களையும் எரித்தனர். பொதுவாக மங்கோலிய தாக்குதலால் அலமுத்தில் இருந்த நிசாரி இஸ்மாயிலிகளின் வசிப்பானது முடித்து வைக்கப்பட்டது என கருதப்பட்டாலும் 1275ஆம் ஆண்டு நிசாரி படைகள் இக்கோட்டையை மீண்டும் கைப்பற்றின. இஸ்மாயிலிகளுக்கு ஏற்பட்ட தாக்குதல் மற்றும் அழிவானது அதிகமாக இருந்தபோதிலும் அவர்களை முற்றிலுமாக ஒழிக்க மங்கோலியர்கள் முயலவில்லை என்பதையே இது நமக்குக் காட்டுகிறது. எனினும் இந்த கோட்டையானது மீண்டும் இஸ்மாயிலிகளால் கைப்பற்றப்பட்டது. 1282ஆம் ஆண்டு ஹுலாகுவின் மூத்த மகனின் ஆட்சியின் கீழ் வந்தது. அதற்குப்பிறகு இக்கோட்டை அப்பகுதியில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. பல்வேறு உள்ளூர். ஆட்சியாளர்களிடம் கைமாறியது.

தற்போது இது சிதிலம் அடைந்துள்ளது. எனினும், இதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக ஈரானிய அரசாங்கமானது இதை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கி வருகிறது.

இக்கோட்டை மறுசீரமைக்கப்படுதல்
அலமுத் கோட்டை ஒரு பார்வை
அலமுத் கோட்டையில் இருந்து ஒரு பார்வை

உசாத்துணை

[தொகு]
  1. Willey, Peter (2005). Eagle's Nest: Ismaili Castles in Iran and Syria. London: I.B. Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85043-464-1.
  2. Daftary, Farhad (1998). The Ismailis. Cambridge, UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-42974-9. [Cited in ]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலமுத்_கோட்டை&oldid=3350555" இலிருந்து மீள்விக்கப்பட்டது