நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்

ஆள்கூறுகள்: 11°13′21″N 78°09′52″E / 11.2224°N 78.1645°E / 11.2224; 78.1645
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்
நரசிம்மர் கோயில், நாமக்கல், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°13′21″N 78°09′52″E / 11.2224°N 78.1645°E / 11.2224; 78.1645
பெயர்
வேறு பெயர்(கள்):இலட்சுமி நரசிம்மர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல் மாவட்டம்
அமைவிடம்:நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி:நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:நாமக்கல் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:260 m (853 அடி)
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நரசிம்மர்
தாயார்:நாமகிரித் தாயார்
குளம்:கமலாலயம்
சிறப்புத் திருவிழாக்கள்:நரசிம்ம ஜெயந்தி,
அனுமன் ஜெயந்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன
வரலாறு
கட்டிய நாள்:கி. பி. ஏழாம் நூற்றாண்டு
அமைத்தவர்:அதியேந்திர குணசீல பல்லவன்[1]
கோயில் நுழைவாயில்

நாமக்கல் நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 260 மீட்டர் உயரத்தில், 11°13′21″N 78°09′52″E / 11.2224°N 78.1645°E / 11.2224; 78.1645 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாமக்கல் நரசிம்மர் கோயில் அமையப் பெற்றுள்ளது.

கோவில் அமைப்பு[தொகு]

இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரித்தாயார் ஆவார். [2] நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம். முதலில் கோயிலுக்கு முன்னே அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார். [3] நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.

நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரது பாதங்களைப் பார்த்து இருப்பதுபோல் அமைந்துள்ளது. கோட்டையின் மேற்குபுறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம். காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது. அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம். [3]

இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர, திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை. எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர். அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணுவாகக் கருதப்படுகிறார். நரசிம்மரை கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு அருள்மிகு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவண்ணம் எழுந்து அருள்கின்றார்.

கல்வெட்டு[தொகு]

இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 1300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழாக்கள்[தொகு]

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களில் குறிப்பிடத்தக்கவையாகும். [2]

ராமானுஜம் தொடர்பு[தொகு]

ராமானுஜம் இத்திருக்கோயிலின் நாமகிரி தாயாரின் பக்தர்.கணித மேதை ராமானுஜம் அவர்களுக்கு கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளார்.[சான்று தேவை] கடினமான கணக்குகளுக்கு கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம்.[4]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  2. 2.0 2.1 அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  3. 3.0 3.1 "Namakkal Namagiri Thayaar, Narasimha Swamy, Anjaneyar". Archived from the original on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  4. "A passage to infinity: The untold story of Srinivasa Ramanujan". The Indian Express (in Indian English). 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.

வெளி இணைப்புகள்[தொகு]