தென்னிந்திய திருச்சபை - கன்னியாகுமரி மறைமாவட்டம்
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
| கன்னியாகுமரி மறைமாவட்டம் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு | நாகர்கோவில், இந்தியா |
| மாநிலம் | தென்னிந்திய திருச்சபை |
| புள்ளிவிவரம் | |
| துறவு சபைகள் | 562 |
| உறுப்பினர்கள் | 4,91,762 |
| விவரம் | |
| உருவாக்கம் | ஜூன் 2, 1959 |
| கதீட்ரல் | இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி |
| தற்போதைய தலைமை | |
| ஆயர் † | செ. கிறிஸ்டோபர் விஜயன் |
| இணையதளம் | |
| www | |
கன்னியாகுமரி மறைமாவட்டம் தென்னிந்தியத் திருச்சபை கீழ் உள்ள 24 மறைமாவட்டங்களில் ஒன்றாகும். இது ஐக்கிய புராட்டஸ்டன்ட் பிரிவானது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ (CSI) தேவாலயங்களைக் கொண்டுள்ளது. இந்த மறைமாவட்டம் ஜூன் 2, 1959 அன்று உருவாக்கப்பட்டது. ஆங்கிலிகன் மறைமாவட்டம் 1879 இல் நிறுவப்பட்டது, பின்னர் தென்னிந்திய திருச்சபையின் (CSI) ஒரு பகுதியாக மாறியது. தெற்கு திருவிதாங்கூர் மறைமாவட்டம் 1959 இல் கன்னியாகுமரி மறைமாவட்டம் மற்றும் தெற்கு கேரளம் மறைமாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1937 முதல், தென் திருவிதாங்கூர் மறைமாவட்டத்தின் பிஷப்பாக இருந்த அர்னால்ட் லெக், தென் கேரள மறைமாவட்டத்தின் பிஷப்பாக தொடர்ந்து பணியாற்றினார். கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் முதல் பிஷப் ஐ.ஆர்.எச். ஞானதாசன் ஆவார்.[1]


மறைமாவட்ட தலைமை ஆயர்கள்
[தொகு]- 1959–1973: ஐ.ஆர்.எச்.ஞானதாசன்
- 1973–1979: சி.செல்வமணி
- 1980–1997: ஜி. கிறிஸ்துதாஸ்
- 1997–2000: எம்.ஐ.கேசரி
- 2000–2018: ஞானசிகமணி தேவகடாஷம்
- 2019–2025: ஏ. ஆர். செல்லையா [3]
- 2025 முதல்: செ. கிறிஸ்டோபர் விஜயன்
தெற்கு திருவிதாங்கூர் மறைமாவட்டம்
[தொகு]அருட் திரு. அர்னால்ட் லெக் 27-09-1947 அன்று புனிதப்படுத்தப்பட்டு 13-10-1947 அன்று தென் திருவிதாங்கூர் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பதவியேற்றார். தெற்கு திருவிதாங்கூர் மறைமாவட்டம் 1959இல் கன்னியாகுமரி மறைமாவட்டம் மற்றும் தெற்கு கேரளம் மறைமாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது, மேலும் 1965இல் இங்கிலாந்திற்குத் திரும்பும் வரை தெற்கு கேரள மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் தொடர்ந்தார்.
நிறுவனங்கள்
[தொகு]மேல்நிலைப் பள்ளிகள்
- றிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளி, மைலாடி
- ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி
- டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
- ஹோம் சர்ச் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
- சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நெய்யூர்
- சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம்
- சி.எஸ்.ஐ ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம்
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, மத்திக்கோடு
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, ஜேம்ஸ்டவுன்
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துகோயில்
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, கடமலைக்குண்டு
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, சீயோன்புரம்
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, தாமரைக்குளம்
- சி.எஸ்.ஐ வி.வி மேல்நிலைப் பள்ளி, ஐரேனிபுரம்
- சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளி, வெங்கஞ்சி
- ஹேக்கர் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, நெய்யூர்
மெட்ரிகுலேஷன் பள்ளி
- சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
உயர்நிலைப் பள்ளிகள்
- சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாந்தபுரம்
- சி.எஸ்.ஐ. வி.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐரேனிபுரம்
நடுநிலைப் பள்ளிகள்
- நடுநிலைப்பள்ளி, கண்ணங்குளம்
- நடுநிலைப்பள்ளி, லெவிஞ்சிபுரம்
- நடுநிலைப்பள்ளி, ஈத்தாமொழி
- நடுநிலைப்பள்ளி, கோரிமோனி
ஆரம்ப பள்ளி
- டதி தமிழ் தொடக்கப்பள்ளி, நாகர்கோவில்
- டதி தமிழ் நர்சரி பள்ளி, நாகர்கோவில்
- மார்டன் (ஸ்காட்) ஆங்கில தொடக்கப்பள்ளி, நாகர்கோவில்
- சி.எஸ்.ஐ கிறிஸ்து தமிழ் தொடக்கப்பள்ளி, காமராஜபுரம்
- சிசு பவன், நாகர்கோவில்
சிறப்பு பள்ளி'
- சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி, கொட்டாரம்
- பார்வையற்றோருக்கான பள்ளி, ஐரேனிபுரம்
- பிஷப் ஞானதாசன் அறிவு இல்லம், சித்திரம்கோட்டில் கொட்டிக்கோடு.
- சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, ஆலன்கோடு
கலை கல்லூரி
- ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி, நாகர்கோவில்[4]
- நேசமணி நினைவு கிருத்துவக் கல்லூரி,மார்த்தாண்டம்[5]
- மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில்[6]
- கிறிஸ்துவக் கல்வியியல் கல்லூரி, மார்த்தாண்டம்[7]
- சி.எஸ்.ஐ. உடற்கல்வி கல்லூரி, ஸ்காட் கல்லூரி வளாகம், நாகர்கோவில்[8]
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
- சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஐரீன்புரம்
பாலிடெக்னிக் கல்லூரி & ஐ.டி.ஐ
- மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி, நாகர்கோவில்[9]
- சி.எஸ்.ஐ. வேதமானிக்கம் நினைவு சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, விரிகோடு, மார்த்தாண்டம்[10]
- சி.எஸ்.ஐ. மோட்டார் மெக்கானிக் பயிற்சி மையம், நாகர்கோவில்
- சி.எஸ்.ஐ. ஐ.டி.ஐ., களியக்காவிளை
நர்சிங் கல்லூரி & பிசியோதெரபி
- சி.எஸ்.ஐ. நர்சிங் பள்ளி,நெய்யூர்
- சி.எஸ்.ஐ. நர்சிங் பள்ளி, மார்த்தாண்டம்
- சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ செவிலியர் கல்லூரி, நெய்யூர்[11]
- சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ செவிலியர் கல்லூரி, மார்த்தாண்டம்[12]
- சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பிசியோதெரபி கல்லூரி, குளச்சல்[13]
பொறியியல் கல்லூரி
மருத்துவமனைகள்'
- சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை, நாகர்கோவில்
- சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை, மார்த்தாண்டம்
- சி.எஸ்.ஐ மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, நெய்யூர்
- சர்வதேச புற்றுநோய் மையம், நெய்யூர்
- சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை, கருங்கல்
- சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை, குலசேகரம்
- சி.பி.எம். தொழுநோய் மருத்துவமனை, உடையார்விளை, குளச்சல்
சரிகை & எம்பிராய்டரி தொழில்கள்
- ̽சி.எஸ்.ஐ. சரிகை மற்றும் எம்பிராய்டரி தொழில், நாகர்கோவில்
- ̈சி.எஸ்.ஐ. எம்பிராய்டரி தொழில், நெய்யூர்
- சி.எஸ்.ஐ. எம்பிராய்டரி தொழில், மார்த்தாண்டம்
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் கிறிஸ்தவம்
- தென்னிந்திய திருச்சபை
- வட இந்திய தேவாலயம்
- தமிழ்நாட்டில் கிறிஸ்தவம்
- கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Who We Are". Archived from the original on 2025-05-13. Retrieved 2025-08-01.
- 1 2 London Missionary Society, ed. (1869). Fruits of Toil in the London Missionary Society. London: John Snow & Co. p. 58. Retrieved 12 September 2016.
- ↑ https://kanyakumari.csi1947.com/
- ↑ https://scott.ac.in/
- ↑ https://www.nmcc.ac.in/
- ↑ https://wcc.edu.in/
- ↑ https://www.christiancollegeofeducation.edu.in/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2025-04-16. Retrieved 2024-03-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2024-11-30. Retrieved 2024-03-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2024-09-27. Retrieved 2024-03-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2024-02-21. Retrieved 2024-03-02.
- ↑ http://csicnm.in/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2025-07-11. Retrieved 2024-03-02.
- ↑ https://www.csiit.ac.in/