துத்தநாக ஆண்டிமோணைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சிங் ஆண்டிமோனைடு
| |
இனங்காட்டிகள் | |
12039-35-9 ![]() | |
பண்புகள் | |
ZnSb, Zn3Sb2, Zn4Sb3 | |
வாய்ப்பாட்டு எடை | 434.06 கி/மோல் |
தோற்றம் | வெள்ளியின் வெண்மையில் சாய்சதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 6.33 கி/செ.மீ3 |
உருகுநிலை | 546 °C (1,015 °F; 819 K) (565 °C, 563 °C) |
வினைபுரிகிறது | |
Band gap | 0.56 எ.வோ (ZnSb), 1.2 எ.வோ (Zn4Sb3) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், oP16 |
புறவெளித் தொகுதி | Pbca, No. 61 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக ஆண்டிமோனைடு (Zinc antimonide) என்பது (ZnSb), (Zn3Sb2), (Zn4Sb3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் ஆண்டிமோனைடு, அலுமினியம் ஆண்டிமோனைடு மற்றும் காலியம் ஆண்டிமோனைடு போன்ற சேர்மங்கள் போலவே இதுவும் ஒரு இடை உலோக குறைகடத்தியாகும். திரிதடையம், அகச்சிவப்பு கண்டறிவிகள், வெப்பத் தோற்றுருவாக்கி மற்றும் காந்தமின்தடைக் கருவிகள் போன்றவற்றில் துத்தநாக ஆண்டிமோனைடு பயன்படுத்தப்படுகிறது.
துத்தநாக ஆண்டிமோனைடு வரலாறு
[தொகு]துத்தநாக – ஆண்டிமணி உலோகக் கலவையை சீபெக் முதன்முதலில் வெப்ப மின்னியல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் மோசசு கெர்ரிசு ஃபார்மர் 1860 களில் உயராற்றல் வெப்பமின் மின்னாக்கியை உருவாக்கினார். இம்மின்னாக்கியில் துத்தநாகம் – ஆண்டிமணி உலோகக்கலவை கிட்டத்தட்ட ZnSb சேர்மத்தின் வேதிவினைக் கூறுகள் விகிதத்தில் பயன்படுத்தப்பட்டது. 1867 ஆம் ஆண்டு பாரிசு கண்காட்சி ஒன்றில் அவர் இம்மின்னாக்கியை காட்சிக்கு வைத்தார். கண்காட்சியில் இம்மின்னாக்கி மிகக்கவனமாக ஆய்வு செய்யப்பட்டு சிறுசிறு மாற்றங்களுடன் கிளமண்டு உட்பட மக்கள் பலரால் நகல் எடுக்கப்பட்டது. இறுதியாக 1870 ஆம் ஆண்டில் அவருடைய மின்னாக்கிக்கான காப்புரிமையை ஃபார்மர் பெற்றார். 1900 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சியார்சு எச் கோவ், Zn-Sb உலோகக் கலவை அடிப்படையிலான வெப்பமின்னியல் மின்னாக்கிக்கான காப்புரிமையைப் பெற்றார். மின்னாக்கியின் ஆறு இணைப்புகளிலும் 3 ஆம்பியரில் 3 வோல்ட் மின்சாரம் பயன்படுத்துவதை இவரது காப்புரிமை அனுமதித்தது. இந்த வெப்ப இரட்டைகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட மின்னாற்றலை விட மிக அதிகமான வெளியீடாக இது அமைந்தது. மற்றும் பட்டை இடைவெளி 0.56 எலக்ட்ரான் வோல்ட்டு ZnSb கலப்பு ஒளிமின்னழுத்த விளைவிற்கான முதலாவது விளக்கமாக அமைந்தது. இதுவே சில சிறப்பு நிலைமைகளின் கீழ் இருமுனையம் ஒன்றுக்கு 0.5 வோல்ட் மின்னாற்றலை வழங்க முடியும். தொடர்ந்து 1930 களில் பிட்சுபெர்க்கில் உள்ள வெசுட்டிங்கவுசில் இருந்த மரியா தெல்கெசு இதே கலப்பு உலோகங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டார். 1990 களில் அதிகப் பட்டை இடைவெளி Zn4Sb3 கலப்பு உலோகங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–95, ISBN 0-8493-0594-2