துத்தநாக பைரோபாசுபேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருதுத்தநாக இருபாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7446-26-6 | |
ChemSpider | 56393 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62641 |
| |
UNII | 6ERT96A621 |
பண்புகள் | |
Zn2P2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 304.72 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
அடர்த்தி | 3.75 கி/செ.மீ3 |
கரையாது | |
கரைதிறன் | நீர்த்த அமிலங்களில் கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக பைரோபாசுபேட்டு (Zinc pyrophosphate) என்பது Zn2P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Zn2+ நேர்மின் அயனியும் பைரோபாசுபேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]துத்தநாக அமோனியம் பாசுபேட்டு வெப்பத்தால் சிதவைடையும் போது துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது. [2]
- 2 ZnNH4PO4 → Zn2P2O7 + 2 NH3 + H2O
சோடியம் கார்பனேட்டு, துத்தநாக ஆக்சைடு, அமோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு ஆகிய சேர்மங்கள் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரிந்தாலும் துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது.[3]
- Na2CO3 + 2 ZnO + 2 (NH4)H2PO4 → Zn2P2O7 + 2 NaOH + 2 NH3 + 2 H2O + CO2
துத்தநாக சல்பேட்டின் வலிமையான அமிலக் கரைசலுடன் சோடியம் பைரோபாசுபேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது.[4]
- 2 ZnSO4 + Na4P2O7 → Zn2P2O7 + 2 Na2SO4
பண்புகள்
[தொகு]துத்தநாக பைரோபாசுபேட்டு வெண்மை நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது. தண்ணீரில் இது கரையாது.[5] தண்ணீர் சேர்த்து சூடாக்கும்போது, துத்தநாக பைரோபாசுபேட்டு சிதைந்து Zn3(PO4)2 மற்றும் ZnHPO4 ஆகிய சேர்மங்களாக மாறுகிறது. ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது. α-வடிவம் குறைந்த வெப்பநிலையிலும் β-வடிவம் அதிக வெப்பநிலையிலும் படிகமாகின்றன.[2][3]
பயன்கள்
[தொகு]துத்தநாக பைரோபாசுபேட்டு ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] துத்தநாகத்தின் எடையறி பகுப்பாய்வில் இது பயனுள்ளதாக இருக்கும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 4–96, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ 2.0 2.1 Calvo, Crispin (1965-05-01). "THE CRYSTAL STRUCTURE AND PHASE TRANSITIONS OF β-Zn 2 P 2 O 7" (in en). Canadian Journal of Chemistry 43 (5): 1147–1153. doi:10.1139/v65-152. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4042. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1965-05_43_5/page/1147.
- ↑ 3.0 3.1 Jarboui, A.; Ben Rhaeim, A.; Hlel, F.; Guidara, K; Gargouri, M. (2010). "NMR study and electrical properties investigation of Zn2P2O7" (in en). Ionics 16 (1): 67–73. doi:10.1007/s11581-009-0333-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-7047. http://link.springer.com/10.1007/s11581-009-0333-5.
- ↑ Ochs, Rudolf (2013). Praktikum der Qualitativen Analyse Für Chemiker · Pharmazeuten und Mediziner. Berlin, Heidelberg: Springer-Verlag. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-28315-8. இணையக் கணினி நூலக மைய எண் 860357745.
- ↑ 5.0 5.1 Perry, Dale L. (2016). Handbook of Inorganic Compounds (2nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மைய எண் 759865801.
- ↑ Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1995). Lehrbuch der anorganischen Chemie (102nd ed.). Berlin: de Gruyter. pp. 1493. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-012641-9. இணையக் கணினி நூலக மைய எண் 237142268.